×

காலம் உள்ளவரை கலைஞர் கண்காட்சி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில் பாராட்டு

சென்னை: காலம் உள்ளவரை கலைஞர் கண்காட்சியை நேற்று பார்வையிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தள பதிவில் அவர் கூறியிருப்பதாவது: சென்னை முதல் குமரி வரை நவீன தமிழ்நாட்டைச் செதுக்கிய கலைஞரின் வாழ்வை நம் கண் முன் விரிக்கும் ‘காலம் உள்ளவரை கலைஞர்’ நவீன கண்காட்சியகத்தை ராஜா அண்ணாமலை மன்றத்தில் இன்று (நேற்று) கண்டுகளித்தோம். கலைஞரின் மெழுகு சிலை செல்பி பாயின்ட், Virtual Reality தொழில்நுட்பத்துடன் கூடிய கலைஞரின் குறும்படம், அவரது வாழ்க்கையை விவரிக்கும் புகைப்படக் கண்காட்சி ஆகியவை கழகத்தின், கலைஞரின், கழகத் தலைவரின் உழைப்பை நம் கண் முன்னே நிறுத்துகின்றன. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த கண்காட்சியைக் கண்கொள்ளா காட்சியாக, சிறப்புற ஏற்பாடு செய்த சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான பி.கே.சேகர்பாபுவுக்கு என் அன்பும் வாழ்த்துகளும். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

The post காலம் உள்ளவரை கலைஞர் கண்காட்சி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Minister ,Udhayanidhi Stalin ,CHENNAI ,Udayanidhi Stalin ,Kalam Untawa ,Kumari ,Tamil Nadu ,
× RELATED நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி...