×

டிடிஎட் தேர்வு முடிவு இன்று வெளியீடு

சென்னை: தொடக்க கல்வி பட்டயத் தேர்வு என்னும் ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பு(டிடிஎட்) தேர்வுகளின் முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது.
தமிழகத்தில் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் நடத்தப்படும் ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பு(டிடிஎட்)களுக்கான முதலாம், இரண்டாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்களுக்கான தேர்வுகள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்தது. தற்போது அதற்கான தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியிடப்படுகிறது. தனித் தேர்வர்கள் தாங்கள் விண்ணப்பித்த  மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் இன்று பிற்பகல் முதல் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

மேற்கண்ட தேர்வு எழுதிய நபர்கள் தங்களின் விடைத்தாள்களின் ஜெராக்ஸ் பெறவும், மறுகூட்டல் செய்யவும் விரும்பினால் www.dge.tn.gov.in  என்ற இணைய தளத்தில் உள்ள  விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, அதை பூர்த்தி செய்து அதற்கான கட்டணத்தை அந்தந்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் நேரடியாக செலுத்தி, ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பங்களை 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை விண்ணப்பிக்க வேண்டும். விடைத்தாளின் ஜெராக்ஸ் பெற்ற பிறகு மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு செய்ய விண்ணப்பிக்க வேண்டும். இதற்காக விண்ணப்பிக்க 7ம் தேதி கடைசி நாள். விடைத்தாள் நகல் பெற ஒரு பாடத்துக்கு ரூ.275 மற்றும் ஆன்லைன் கட்டணம் ரூ.50 , மறு கூட்டல் செய்ய ஒரு பாடத்துக்கு ரூ.205, மற்றும் ஆன்லைன் கட்டணம் ரூ. 50 செலுத்த வேண்டும்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DTT Exam ,results ,issued today
× RELATED தொழில் நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ...