×

குல்காம் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் இருவர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என தகவல்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் குல்காம் மாவட்டத்தில் உள்ள டரிகாம் பகுதியில் நேற்று பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையின் போது ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். போலீஸ் துணை சூப்பிரண்ட் அமான் தாக்குர் என்பவரும் வீரமரணம் அடைந்தார். மேலும் ஒரு ராணுவ உயரதிகாரி பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்நிலையில், நேற்றைய மோதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் இருவர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் என தற்போது தெரியவந்துள்ளது.

வாலித் மற்றும் நுமான் என்னும் அவர்கள் இருவரும் பாகிஸ்தானில் இருந்து எல்லைக்கோட்டின் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து காஷ்மீரின் தெற்கு பகுதியில் ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள்சேர்க்கும் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்ததாக போலீஸ் உளவுப்படை வட்டாரங்கள் இன்று தெரிவித்துள்ளன. இதற்கிடையில், நேற்றைய தேடுதல் வேட்டையின்போது பயங்கரவாதிகளை எதிர்த்து போரிட்டு வீரமரணம் அடைந்த போலீஸ் துணை சூப்பிரண்ட் அமான் தாக்குர் உடலுக்கு காஷ்மீர் கவர்னர் சத்ய பால் மாலிக், போலீஸ் மற்றும் ராணுவ உயரதிகாரிகள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Two ,terrorists ,encounter ,Gulkham ,Pakistan , Two , terrorists,killed,Kulkam encounter ,Pakistan
× RELATED ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில்...