×

அய்யப்பன்தாங்கல்- மவுலிவாக்கம் இடையே புதிதாக மினி பஸ்கள் விட வேண்டும்: தா.மோ.அன்பரசன் கோரிக்கை

சென்னை: அய்யப்பன்தாங்கல்- மவுலிவாக்கம் இடையே புதிதாக மினி பஸ்கள் விட வேண்டும் என்று பேரவையில் தா.மோ.அன்பரசன் கோரிக்கை விடுத்தார். இதை ஆய்வு செய்து மினி பஸ் விடப்படும் என்று அமைச்சர்  விஜயபாஸ்கர் கூறினார்.  சட்டப் பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது ஆலந்தூர் தா.மோ.அன்பரசன் (திமுக) கூறியது: ஆலந்தூர் தொகுதியில் அய்யப்பன்தாங்கல் - மவுலிவாக்கம் இடையே மினிபஸ் இயக்க அரசு முன்வருமா? அமைச்சர் விஜயபாஸ்கர்: தற்போது 3 மினி பஸ்கள் அய்யப்பன்தாங்கல் ராஜரத்தினம் நகர் வழியாக இயக்கப்படுகின்றன. அய்யப்பன்தாங்கல் -மவுலிவாக்கம் இடையே போதிய அளவில் மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன.  எனவே, தற்போது அந்த பகுதியில் மினி பஸ் இயக்க அவசியம் எழவில்லை.

தா.மோ. அன்பரசன்: அய்யப்பன்தாங்கல் -மவுலிவாக்கம் பகுதிகளில் முருகன் நகர், மதுரம் நகர், இந்திராணி நகர் சாய் நகர், அபிராமி நகர் போன்ற இடங்களில் 30 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். அவர்கள் அய்யப்பன்தாங்கல்  வருவதற்கு 3 கி.மீ. நடந்து வர வேண்டியுள்ளது. எனவே மதுரம் நகர் வழியாக மினி பஸ் இயக்க வேண்டும். அமைச்சர் விஜயபாஸ்கர்: உறுப்பினர் குறிப்பிடும் பகுதிகளை ஆய்வு செய்து தேவைப்பட்டால் மினி பஸ் இயக்க ஆவன செய்யப்படும். தா.மோ.அன்பரசன்: திமுக ஆட்சியில் குன்றத்தூர், முகலிவாக்கம் பகுதிகளில் 12 வழித்தடங்களில் பஸ்கள் விடப்பட்டன. 50 கி.மீ. வரை நீடித்து கிராமங்களுக்கு பஸ்கள் விடப்பட்டன. தற்போது அவை படிப்படியாக குறைக்கப்பட்டு  விட்டன. எனவே குறைக்கப்பட்ட பஸ்களை மீண்டும் விட வேண்டும்.      
  விஜயபாஸ்கர்: பயணிகள் எண்ணிக்கைக்கேற்ப பஸ்கள் இயக்கப்படுகின்றன. உறுப்பினர் கூறிய வழித்தடங்களில் பஸ்கள் குறைக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Moulivakkam ,Th.M.Abancaran , Ayyappanankal- Mowliquam,mini buses,Th.M.Abancaran's request
× RELATED அய்யப்பன்தாங்கல்- மவுலிவாக்கம் இடையே...