×

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட முதலமைச்சர், அதிமுகவினரை அனுமதிக்க கோரிக்கை விடுத்தார் : அமைச்சர் ரகுபதி

சென்னை : ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட முதலமைச்சர், அதிமுகவினரை அனுமதிக்க கோரிக்கை விடுத்ததாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “கேள்வி நேரம் முடிந்த பிறகு கள்ளக்குறிச்சி விவகாரம் பற்றி விவாதிக்கலாம் என சபாநாயகர் கூறினார். அரசியல் செய்ய வாய்ப்பு கிடைக்குமா என எடப்பாடி பழனிசாமி தேடிக் கொண்டிருக்கிறார். பேரவையில் பேச அனுமதி தரவில்லை என பழனிசாமி கூறுவது அப்பட்டமான பொய். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருத்துகளை கூற வாய்ப்பு அளிக்கப்பட்டது,”இவ்வாறு தெரிவித்தார்.

The post ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட முதலமைச்சர், அதிமுகவினரை அனுமதிக்க கோரிக்கை விடுத்தார் : அமைச்சர் ரகுபதி appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Minister ,Ragupati ,Chennai ,
× RELATED ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு,...