×

காரைகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் இயங்கும் மணவாளநகர் பெண்கள் பள்ளி: இடித்து விட்டு புதிதாக கட்ட பெற்றோர் கோரிக்கை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில் மிகவும் பழுதடைந்த, சீரமைக்க இயலாத மற்றும் ஆபத்தான நிலையிலுள்ள வகுப்பறை கட்டிடங்கள் குறித்து ஓராண்டுக்கு முன் கணக்கெடுக்கப்பட்டு பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதில் பெரும்பாலும் 40 ஆண்டுகளுக்கு முந்தைய கட்டிடங்களாகும். குறிப்பாக திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் அரசு பெண்கள் உயர்நிலை பள்ளியானது ஆபத்தான கட்டிடங்களில், இடநெருக்கடியில் இயங்கி வருகிறது.இங்குள்ள தலைமை ஆசிரியர் அறை மற்றும் மாணவர்கள் வகுப்பறையில் மேற்கூரையின் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து திடீரென கீழே விழுகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், நாகை மாவட்டம், பொறையாரில் அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தில் ஓய்வறை இடிந்து 8 பேர் உயிரிழந்த சம்பவம் நடந்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் துறைகள் வாரியாக ஆபத்தான கட்டிடங்கள் குறித்து கணக்கெடுத்து அகற்ற அரசு உத்தரவிட்டது.

இதன்பேரில் திருவள்ளூர் மாவட்ட கல்வித்துறை சார்பில் ஆபத்தான வகுப்பறை பட்டியல் மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், இக்கட்டிடங்களை அகற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், கட்டிடங்களின் அருகே மாணவர்கள் விளையாடும்போது, எதிர்பாராமல் இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என பெற்றோர்கள் கூறுகின்றனர்.இதுகுறித்து, கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘அரசு பள்ளிகளில் இடிக்க வேண்டிய வகுப்பறைகள் குறித்த பட்டியல் விவரம் ஓராண்டிற்கு முன்பே அளிக்கப்பட்டும் அவை இடிக்கப்படவில்லை. இவை அகற்றப்பட்டால் புதிய வகுப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்கலாம்’ என்றார்.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Maravahanagar Girls' School ,demolition ,parents , car,conditions,Manavalanagar ,Girls' Schoo
× RELATED NCERT பாடப்புத்தகங்களில், பாபர் மசூதி...