×

புஜாரா அபார சதம்

கர்நாடக அணியுடனான ரஞ்சி கோப்பை அரை இறுதியில், சவுராஷ்டிரா அணி வெற்றியை நெருங்கியுள்ளது. பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியின் முதல் இன்னிங்சில் கர்நாடகா 275 ரன்,  சவுராஷ்டிரா 236 ரன் எடுத்தன. 39 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை விளையாடிய கர்நாடக அணி 239 ரன்னில் ஆல் அவுட்டானது. 279 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய  சவுராஷ்டிரா 23 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறியது.

 இந்த நிலையில், செதேஷ்வர் புஜாரா - ஷெல்டன் ஜாக்சன் ஜோடி 4வது விக்கெட்டுக்கு உறுதியுடன் போராடி ரன் சேர்த்தது. 4ம் நாள் ஆட்ட முடிவில் சவுராஷ்டிரா 3 விக்கெட் இழப்புக்கு 224 ரன் எடுத்துள்ளது. புஜாரா 108 ரன்,  ஜாக்சன் 90 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர். கை வசம் 7 விக்கெட் இருக்க, சவுராஷ்டிரா அணி வெற்றிக்கு இன்னும் 55 ரன் மட்டுமே தேவை என்ற நிலையில், இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெறுகிறது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pujara Good half
× RELATED டி.20 உலக கோப்பை தொடர்: 39 ரன் வித்தியாசத்தில் ஓமனை வென்ற ஆஸ்திரேலியா