×

வெவ்வேறு வங்கிகளில் உரிமை ஆவணங்களை வைத்து கடன் பெற்றால் தனித்தனியாக கட்டணம்: பதிவுத்துறை ஐஜி சார்பதிவாளர்களுக்கு அறிவுரை

சென்னை: ெதாழில் தொடங்கவோ அல்லது பிற காரணங்களுக்காக கடன் பெறுவதற்காக உரிமை ஆவணங்கள் வைத்து கடன் பெறுவது மற்றும் தங்களது சொத்துக்களையே அடமான கடன் அடிப்படையில் வங்கியில் உரிமை  ஆவணங்களை ஒப்படைத்து கடன் பெறப்படுகிறது. இவ்வாறு கடன் பெறும் தொழில் முனைவோர்கள் அல்லது தனிநபர்கள் ஒரு சொத்தை வைத்து எத்தனை கடன்கள் வேண்டுமென்றாலும் உரிமை ஆவணங்களை வைத்து  பெறலாம். அவ்வாறு பல நபர்கள் ஒரு சொத்தை வைத்து வாங்கும் கடனுக்கு ஒரே உரிமை ஆவணங்களை வைத்து கடன் வாங்க முடியும். இதற்காக, 0.5 சதவீதம் அதாவது ₹36 ஆயிரம் மட்டுமே கட்டணமாக பதிவுத்துறையால்  வசூலிக்கப்படுகிறது. இது தெரியாமல் பொதுமக்கள் பலர் அதாவது ஒரு குடும்பத்தில் 3 பேர் ஒரு சொத்தின் மீது கடன் பெற்றால் அவர்கள் 0.5 சதவீதம் என்கிற அடிப்படையில் 1.5 சதவீதம் தனித்தனியாக கட்டணமாக  செலுத்துகின்றனர். இது தொடர்பாக பதிவுத்துறை ஐஜி குமரகுருபரனுக்கு ஏராளமான புகார்கள் வந்தது.

அதன்பேரில் ஒரு சொத்தை வைத்து குடும்பத்தை சேர்ந்த பலர் ஒரே வங்கியில் உரிமை ஆவணங்களை ஒப்படைத்து கடன்  பெறும் பட்சத்தில், அவர்களிடம் 0.5 சதவீதம் மட்டுமே பதிவுக்கட்டணமாக வசூலிக்க வேண்டும். மேலும், வெவ்வேறு வங்கிகளில் கடன் பெற விரும்பினால் மட்டுமே தனித்தனியாக கட்டணம் வசூலிக்க வேண்டும். மேலும், 3  வெவ்வேறு நபர்கள் சேர்ந்து தங்களது சொத்தை வைத்து தொழிலுக்காக வங்கிகிகளிடம் கடன் பெற முயன்றால் அதை ஒரே டாக்குமெண்டாக எடுத்து கொண்டு 0.5 சதவீதம் மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று  பதிவுத்துறை ஐஜி குமரகுருபரன் அனைத்து சார்பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : IGs , Idifferent banks, documents, Individual, Registration ,IG Respondents
× RELATED நாளை மறுதினம் நடைபெறும் தேர்தல்...