×

நாங்குநேரி பெரியகுளத்தில் வேட்டையாடப்படும் வெளிநாட்டு பறவைகள்

* பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

நாங்குநேரி :  நாங்குநேரி பெரியகுளத்தில் வேட்டையாடப்படும் பறவைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெரியகுளம் 10 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்டது. இதன் மூலம் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.


பெரியகுளத்திற்கு ஆண்டுதோறும் ஏராளமான வெளிநாட்டு பறவைகள் இரை தேடி வருகின்றன. இங்கு வரும் நாரைகள், பட்டைதலை வாத்துகள், கூழைக்கிடா, அகப்பைவாயன், நீர்க்காகம், பாம்புதாரா, முங்குளிப்பான், நாமவாத்து, ஊசிவாத்து உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டுப் பறவைகளுக்கு போதிய வாழிட அமைப்பு இல்லை.

alignment=


பறவைகள் கூடு கட்டுவதற்கு தேவையான பெரிய அளவிலான மரங்களோ அல்லது செயற்கை வாழிடங்களோ ஏதும் இப்பகுதியில் ஏற்படுத்தப்படவில்லை. இதனால் இரை தேடி வரும் பறவைகள், இரவு நேரங்களில் தங்குவற்காக வேறு பகுதியிலுள்ள மரங்களை நாடிச் செல்கின்றன. மேலும் இங்கு வரும் பறவைகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லாததால் அவை விலங்குகளால் வேட்டையாடப்படுகின்றன.

குளத்து நீரில் இரை தேடிய பின் கரையோரம் உள்ள புல்வெளிகளில் இறக்கைகளை உலர்த்தி இளைப்பாறும்போது நாய், நரி போன்ற விலங்குளால் நீர்ப்பறவைகள் கொல்லப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் கொல்லப்பட்ட பறவைகளின் இறகுகளும், எலும்புகளும் சிதறிக் கிடக்கின்றன. பறவைகள் நலன் கருதி இப்பகுதியில் மரங்கள் வளர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் நீண்டநாளைய கோரிக்கையாக உள்ளது. தற்போது வனத்துறை மூலம் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nanguneri , Periyakulam,Nanguneri ,hunted ,Foreign birds
× RELATED கோவை வரைவு வாக்காளர் பட்டியலில் 10...