×

இலவச கழிவறை இடிப்பு திறந்தவெளியில் ‘உச்சா’ போகும் பயணிகள்

*சிவகாசி  பஸ்ஸ்டாண்டில் பயங்கர ‘கப்’

சிவகாசி : சிவகாசி  பஸ்நிலைய விரிவாக்க பணிக்காக பொது கழிப்பறை இடித்து அகற்றப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் திறந்த வெளியில் சிறுநீர் கழிப்பதால் துர்நாற்றம் அடிக்கிறது. சுகாதாரக்கேடு அபாயம் நிலவுகிறது.  சிவகாசி பழைய பஸ்நிலையம் 2.5 ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பஸ் நிலையத்தில் போதிய இட வசதி இல்லாததால் கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் பழைய பஸ்நிலையம் அருகே உள்ள 1.5 ஏக்கர் நிலத்தில் புதிய பஸ் நிலையம் கட்டி விரிவுபடுத்தும் பணி கடந்த 2006ம் ஆண்டு துவங்கியது.

பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும்  இந்த பஸ் நிலையத்தில் 14 கடைகள், புதிய பேருந்து நிறுத்தம், நவீன கழிப்பறை வசதிகள் செய்து தரப்படும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்திருந்தது. கடந்த 3 ஆண்டாக பஸ் நிலையம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது புதிய வணிக வளாகம், வாறுகால், தரைதளம் கட்டும் பணிகள் முடிவடைந்துள்ளன.

இந்நிலையில்  கடந்த பல மாதங்களாக புதிய பஸ் நிலையத்தில் கட்டுமான பணிகள் நடைபெறாமல் முடங்கி கிடந்தன. பின்னர் விரிவாக்க பணிக்கு இடையூறாக இருந்த 26 கடைகள், பொது சிறுநீர் கழிப்பறை  அகற்றப்பட்டு மீண்டும் பணிகள் துவக்கப்பட்டன.  பஸ்நிலையத்தில் இருந்த பொது கழிப்பறை இடிக்கப்பட்டு அகற்றப்பட்டதால் பயணிகள் கட்டணம் கொடுத்து கழிப்பறை செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டள்ளது. இதனை பயன்படுத்தி பஸ்நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பறையில் பயணிகளிடம் ரூ.5 வரை  கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.

சிவகாசி நகராட்சிக்கு ரோட்டரி சங்கம் சார்பில் புதிய நடமாடுட்ம் கழிப்பறை வழங்கப்பட்டுள்ளது. இந்த நடமாடும் கழிப்பறையை காலை, மாலை நேரங்கிளில் பஸ்நிலையத்தில்  பயணிகள் நலன் கருதி இலவசமாக பயன்படுத்த  கோரிக்கை விடுத்தனர். நகராட்சி நிர்வாகம் இதனை நிறைவேற்றி தராததால் பஸ்நிலையத்தின் உள்ளே திறந்த வெளியில் சிறுநீர் கழிக்கின்றனர். இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன் துர்நாற்றம் வீசுவதால் பயணிகள் பெரும் அவதிப்படுகின்றனர். எனவே புதிய பஸ்நிலைய விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்கவும், பயணிகள் வசதிக்காக நடமாடும்  கழிப்பறையை பஸ் நிலையத்தில் காலை, மாலை நேரங்களில் நிறுத்தி வைக்கவும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Toilet Demolition Openers ,passengers ,Ucha , Sivakasi ,Busstand,Freee toilet
× RELATED சேலம் – கொச்சி விமானம் திடீர் ரத்து: 50...