×

எம்.ஆர்.சி நகரில் 73 கோடி மதிப்பீட்டில் புதிய நிர்வாக அலுவலகம்: முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை: சாந்தோம் நெடுஞ்சாலை எம்.ஆர்.சி நகரில் 73 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நிர்வாக அலுவலக வளாக கட்டிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். தமிழ்நாடு முழுவதும் உள்ள 11 மாநகராட்சிகள் (சென்னை நீங்கலாக) மற்றும் 124 நகராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிற திட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பாக ஒருங்கிணைப்பு வழிகாட்டும் அலுவலகமாக நகராட்சி நிர்வாக ஆணையரகம் செயல்பட்டு வருகிறது.தற்போது, சென்னை சேப்பாக்கம், எழிலக வளாகத்தில் 200 அலுவலக ஊழியர்களுடன் 1640 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இடத்தில் நகராட்சி நிர்வாக அலுவலகமும், சென்னை, குறளகம் வளாகத்தில் 120 அலுவலக ஊழியர்களுடன் 1100 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இடத்தில் பேரூராட்சிகளின் இயக்ககமும், போதுமான இடவசதியின்றி செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசால் 664 நகர்ப்புறங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் வழங்கல் திட்டப்பணிகள், பாதாள கழிவுநீரகற்று திட்டப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளை ஆய்வு செய்ய முறைப்படி காலவாரியாக ஆய்வுக் கூட்டங்கள் நடத்த ஆய்வு கூட்டரங்க வசதிகள் இல்லாத காரணத்தினால் பிற துறை அலுவலக ஆய்வு கூட்டரங்கில் ஒவ்வொரு முறையும் அனுமதி பெற்று கூட்டங்கள் நடந்து வந்தது. இந்நிலையில், சாந்தோம் நெடுஞ்சாலை, எம்.ஆர்.சி. நகரில் 11,000 சதுர மீட்டர் பரப்பளவில் 73 கோடியே 8 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. நகராட்சி நிர்வாக ஆணையரகம் மற்றும் பேரூராட்சிகள் இயக்கக அலுவலகங்களை உள்ளடக்கிய நகர் நிர்வாக அலுவலக வளாகக் கட்டிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chief Executive Officer ,Chief Minister ,MRC , MRC Nagar, New Executive Office, Chief Minister
× RELATED இந்தியன் வங்கியின் 2023-24ம் ஆண்டுக்கான...