×

சர்வீஸ் செய்வதில் மன உளைச்சல் மொபட் நிறுவனத்துக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

சென்னை:  நுங்கம்பாக்கம், கக்கன் சாலையில் உள்ள எலக்ட்ரிக் வாகன நிறுவனத்தில், ஜான் சிங் என்பவர் கடந்த 2016ம் ஆண்டு ஜூலை மாதம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்  வாங்கியுள்ளார். 14 மாதம் ஸ்கூட்டருக்கு உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு ஸ்கூட்டர் ஓடாமல் நின்றுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் சர்வீஸ் சென்டரில் முறையிட்டபோது அதனை சரி செய்ய ₹9 ஆயிரம் தர வேண்டும்  என்று கேட்டுள்ளார். இன்னும் வாரண்டி உள்ளது என்று தெரிவித்தபோது, அதனை அலட்சியப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து ஜான் சிங் சென்னை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு  நீதிபதி லக்‌ஷ்மிகாந்தன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது எனவே மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளச்சலுக்கு, ஸ்கூட்டர் நிறுவனம் ₹25 ஆயிரம் இழப்பீடு மற்றும் புதிய பேட்டரி  வழங்க  உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mobit,fine , Rs 25, thousand
× RELATED தொழில் நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ...