×

பிளாஸ்டிக் தடைக்கு 6 மாதம் அவகாசம்: விக்கிரமராஜா வலியுறுத்தல்

சென்னை: பிளாஸ்டிக் தடையை அமலபடுத்த  6 மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு  வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:  பிளாஸ்டிக் தடை சட்ட அமலாக்கத்தை மறு ஆய்வு செய்து குறைந்தது 6 மாத கால அவகாசம் வழங்கி வணிகர்களுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்தி அதன் பின் அமல்படுத்திட வேண்டும். பிளாஸ்டிக் தடையை வணிகர் சங்க பேரமைப்பு கண்டிக்கிறது. சுமார் 26 ஆயிரம் உற்பத்தியாளர்கள், 3 லட்சம் வணிகர்கள் மற்றும் பல லட்சம் பயனாளிகள் குடும்பங்களின் வாழ்வாதாரங்களை இன்றைக்கு கேள்விக்குறி ஆகியுள்ளது.

எடுத்தேன் கவிழ்த்தேன் என்று கடைக்கு சீல் வைக்கவோ, கைது செய்யவோ பொருட்களை அள்ளிச் செல்லவோ, அபராதம் விதிக்கவோ முயற்சிகளை மேற்கொண்டால், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வீதியில் இறங்கி போராடவும் தயங்காது என்று எச்சரிக்கை விடுக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளோம். பிளாஸ்டிக் தொழிலில் இருப்பவர்களுக்கு புத்தாண்டு பரிசாக கால அவகாசம் அளித்து வாழ்வாதாரம் காத்திட வேணடும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Wickramarama , 6 months , plastic,blockade, Wickramarama assertion
× RELATED விக்கிரமராஜா பேட்டி குளித்தலை அரசு...