×

தேர்தலில் வெற்றி பெற தமிழக பாஜவினர் கடுமையாக உழைக்க வேண்டும்: நிர்வாகிகளுக்கு ஆர்வம் குறைவாக உள்ளது என மோடி புகார்

சென்னை:  வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுவதற்காக பிரதமர் மோடி நாடு முழுவதும் உள்ள பாஜ நிர்வாகிகள் மற்றும் வாக்குசாவடி நிர்வாகிகளுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். அதில் தேர்தலில் வெற்றி பெற பாஜவினர் எப்படியெல்லாம் செயல்பட வேண்டும் என்று கூறி வருகிறார். இந்தநிலையில் நேற்று தென்சென்னை, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் மாவட்ட வாக்குசாவடி நிர்வாகிகள் மற்றும் புதுச்சேரி மாநில நிர்வாகிகளுடன் வீடியோ கான்பரன்சில் கலந்து ஆலோசனை செய்தார். அதில் தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தராஜன், இல கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

அப்போது மோடி பேசியதாவது: தேர்தலில் வெற்றிபெற இறங்கி கடுமையாக உழைக்கவேண்டும். வாக்குசாவடியை பலப்படுத்தினால் தான் வெற்றி பெற முடியும் என்றார். அப்போது பாஜ பூத் நிர்வாகி ஒருவர், டீசல் மற்றும் பெட்ரோல் விலை எப்போது ஜிஎஸ்டியில் கொண்டுவரப்படும் என்று கேள்வி கேட்டார். அதற்கு சிரித்தபடி பதிலளித்த மோடி, இதுகுறித்து ஜிஎஸ்டி கவுன்சில் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறினார். மேலும் தமிழக வாக்குசாவடி நிர்வாகிகளுக்கு உழைப்பும், ஆர்வமும் தேவைப்படுகிறது என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : BJP ,Tamil Nadu ,elections ,Modi , Election, good BJP, Modi
× RELATED அண்ணாமலை மீது கிரிமினல் வழக்குபதிவு...