×

சந்திரகாசிக்கு சிறப்பு ரயில்

சென்னை: சென்ட்ரலில் இருந்து சந்திரகாசிக்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரலிலிருந்து மேற்குவங்க மாநிலம் சந்திரகாசிக்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் வரும் 15, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் சென்ட்ரலில் இருந்து மாலை 6.20 புறப்பட்டு அடுத்தநாள் இரவு 11.30க்கு சந்திரகாசிக்கு சென்றடையும். இந்த ரயிலில் இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டிகள் 4, மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகள் 5, படுக்கை வசதி கொண்ட 4 பெட்டிகள் இருக்கும்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Special train to Chandrakasi
× RELATED பிளஸ் 1 பொது தேர்வில் மாநகராட்சி பள்ளி...