×

விடுதியில் ரகசிய கேமரா பொருத்தி இளம்பெண்களை ரசித்தவர் மீது குண்டர் சட்டம் பாய்கிறது

சென்னை: பெண்கள் விடுதியில் குளியல் காட்சிகளை வீடியோ எடுத்து பார்த்த தொழில் அதிபரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய போலீசார் நட வடிக்கை எடுத்து வருகின்றனர்.சென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகர் 1வது தெருவில் இரண்டு அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில், திருச்சியை சேர்ந்த சஞ்சீவ்(எ)சம்பத்(45) என்பவர் பெண்கள் விடுதி நடத்தி வந்தார். இந்த  விடுதியில் ஐடி நிறுவனம் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் 10க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் தங்கி பணியாற்றி வந்தனர்.விடுதி உரிமையாளர் சஞ்சீவ், பராமரிப்பு என்ற  பெயரில் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் விடுதியின் குளியல் அறை, படுக்கை அறை, உடை மாற்றும் அறைகளுக்கு வந்து சென்றுள்ளார். இதற்கிடையே விடுதியில் தங்கி இருந்த  புதுச்சேரியை சேர்ந்த பேராசிரியை ஒருவர் குளித்த போது, ஷவர் அருகே வட்டர் ஹீட்டர் அமைப்பதற்கான மின் இணைப்பில் கருப்பாக சிறிய பொருள் ஒன்று இருந்துள்ளதை கவனித்துள்ளார். அைத  பார்த்தபோது வயருடன் சிறிய வகை கேமரா ஒன்று இணைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே சக பெண்களிடம் ரகசிய கேமராவை காட்டி அழுதுள்ளார்.அப்போது, ஐடி  நிறுவனத்தில் வேலை செய்யும் பெண் ஒருவர், தனது செல்போனில் “ ைஹடன் காமிரா டிவைஸ் ஆப்” உதவியுடன் ஆய்வு செய்து, 3 குளியல் அறை, படுக்கை அறையில் துணிகள் தொங்கவிடும்  கைப்பிடி, 3 கழிவறை, உடைமாற்றும் அறைகள் என இரண்டு தளத்திலும் 16 இடங்களில் ரகசியமாக கேமராக்களை கண்டு பிடித்தார்.

பின்னர் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள்  ஆதம்பாக்கம் காவல்நிலையத்தில் ரகசிய கேமராவுடன் புகார் அளித்தனர். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து விடுதி நடத்தி வந்த சஞ்சீவ் வசித்து வரும் அஸ்தினாபுரம் வீட்டிற்கு சென்று  அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஏராளமான செல்போன்கள், லேப்டாப், கணினிகளை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். அப்போது விடுதியில் தங்கியுள்ள இளம் பெண்களின்  குளியல் காட்சிகள் மற்றும் உடைமாற்றும் காட்சிகள் அடங்கிய நூற்றுக்கும் மேற்பட்ட வீடியோக்கள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில்  2 மாதங்களாக இவ்வாறு வீடியோ எடுத்து பார்த்து ரசித்ததாக கூறியிருந்தார். இந்தச் சம்பவம் குறித்து ஆதம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி, விசாரணை நடத்தி வருகிறார். இதில் கைது  செய்யப்பட்டவர் மீது ஏராளமான குற்ற வழக்கு மற்றும் மோசடி வழக்குகள் உள்ளதால், அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்வதற்கான நடவடிக்கையில் போலீசார்  இறங்கியுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : cameraman ,hotel , The thief's law,cameraman ,fights,secret ,hotel
× RELATED டெல்லி அலிபூரில் உள்ள கார்னிவல் சொகுசு விடுதியில் பயங்கர தீ விபத்து