×

துப்புரவு பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க எதிர்ப்பு : சென்னையில் துப்புரவு தொழிலாளர்கள் போராட்டம்

சென்னை : மாநகராட்சி துப்புரவு பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து ரிப்பன் மாளிகையை முற்றுகையிட்டு துப்புரவு தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். சென்னை மாநகராட்சியில் 15,000க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் 3 மண்டலங்கள் மட்டும் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மற்ற மண்டலங்களையும் தனியாரிடம் ஒப்படைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான டெண்டர் வரும் 7ம் தேதி நடைபெற உள்ளது. இதனை கண்டித்து சென்னையில் துப்புரவு தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தனியாரிடம் ஒப்படைத்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று துப்புரவு தொழிலாளர்கள் கூறியுள்ளனர். மேலும் துப்புரவு பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை மாநகராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும் என்றும், காலியாக உள்ள துப்புரவு பணியாளர்கள் இடங்களை நிரப்ப வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த மாதமே டெண்டர் விடவிருந்த நிலையில், துப்புரவு  தொழிலாளர்களின் எதிர்ப்பால் இந்த மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும் மாநகராட்சி அதிகாரிகள் இதுகுறித்து தொழிலார்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும், அதில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. இந்நிலையில் சென்னையில் இன்று ரிப்பன் மாளிகையை முற்றுகையிட்டு சுமார் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிடாததால் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தொழிலார்களின் எதிர்ப்புகள் மத்தியில் வரும் 7ம் தேதி டெண்டர் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : sweepers ,Cleaners workers ,Chennai , Cleaning work, private, Chennai, cleaning workers' strike
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...