×

நூதன முறையில் சம்பாதிக்கும் எம்டிசி அதிகாரிகள் தி.நகர் பணிமனையில் 5,600 லிட்டர் டீசல் மாயம்: தொழில்நுட்ப பணியாளர் 8 நாள் சஸ்பெண்ட்

சென்னை: எம்டிசியின் கட்டுப்பாட்டிலுள்ள தி.நகர் பணிமனையில், 5,600 லிட்டர் டீசல் மாயமானது தொடர்பாக, தொழில்நுட்ப பணியாளர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஆனால் இந்த விவகாரத்தில் நூதன முறையில் சம்பாதிக்கும் அதிகாரிகள் தப்பிவைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. சென்னை மாநகரப் போக்குவரத்துக்கழகம் (எம்டிசி) சார்பில் தினசரி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது. சுமார் 600க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இயக்கப்படும், இந்த பஸ்களில், நாள்தோறும் 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர். இவ்வாறு இயக்கப்படும் பஸ்களுக்கு நாள்தோறும், மாநகர போக்குவரத்துத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் பணிமனைகளில் உள்ள ‘டீசல் பங்க்’களில் இருந்து டீசல் நிரப்பப்படுகிறது. இந்த பணிமனைகள் மாநகரில் 36 இடங்களில் இருக்கின்றன. இங்கு இருக்கும், ‘பங்க்’குகளுக்கு, ‘ஐஓசி’யில் இருந்து குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை டீசல் பிரத்தியேக லாரிகள் மூலமாக கொண்டுவரப்பட்டு நிரப்பி வைக்கப்படும்.

சென்னையில் மட்டும் மாதந்தோறும் சுமார் 36 லட்சம் லிட்டருக்கு மேல் டீசல் அரசு பஸ்களுக்கு நிரப்பப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கான கணக்கு மற்றும் எந்த பஸ்களுக்கு எவ்வளவு நிரப்பலாம் என்று முடிவு செய்வது பணிமனைகளில் இருக்கும் மேலாளர்கள்தான். அவர்கள் தங்களுக்கு வேண்டப்பட்ட பணியாளர்கள் சிலரை கையில் போட்டுக் கொண்டு, நூதன முறையில் முறைகேட்டில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இது அவ்வப்போது நடத்தப்படும் ஆய்வுகளின் மூலம் உறுதிசெய்யப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எண்ணூர் பணிமனையில் டீசல் திருட்டு நடந்தது. அதில் பணியாளர் ஒருவர் சஸ்ெபண்ட் செய்யப்பட்டார். அதன்தொடர்ச்சியாக கடந்தவாரம் தி.நகர் பணிமனையில், 5,600 லிட்டர் டீசல் மாயமானது. இதில் சம்மந்தப்பட்ட பணிமனையில் தொழில்நுட்ப பணியாளராக இருக்கக்கூடிய சுரேஷ் என்பவர், 8 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் இதில் பல உயரதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.   



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : workshop ,Diesel , 5,600 liters,TNagar workshop,technical worker,8 day suspended
× RELATED பொன்மலை ரயில்வே பணிமனையில் வேலைநேரம் காலை 7 மணிக்கு மாற்றம்