×

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் அபராதம்: மாநில வாணிபக் கழகம் எச்சரி்க்கை

சென்னை: டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூடுதலாக விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு ஒரு ரூபாய்க்கும் ஆயிரம் ரூபாயும், அதிகபட்சமாக 10 ஆயிரம் ரூபாய் வரையும் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட 20 ரூபாய் கூடுதலாக விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்ததாகவும் ஆய்வில் அது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 ரூபாய் மற்றும் அதற்கு கூடுதல் விலையில் விற்பனை செய்யும் கடையின் பணியாளர்கள் விடுவிக்கப்பட்டு அபராதத் தொகையை வசூலித்த பின்னர் கிடங்கில் பணியமர்த்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : stores ,Tasmuk ,State Trading Corporation , Tashmax Shop, Wine, Fines, State Trading Corporation
× RELATED கோயம்பேடு சந்தையில், காய்கறிகளின் விலை 2 மடங்காக உயர்ந்ததால் மக்கள் வேதனை!