×

மேம்பாட்டு கட்டணம் செலுத்திய ஆவணம் இணைத்தால் தான் பத்திரம் பதிவு செய்ய வேண்டும்: பதிவுத்துறை ஐஜி சார்பதிவாளர்களுக்கு அறிவுரை

சென்னை: தமிழக பதிவுத்துறை ஐஜி குமரகுருபரன் அனைத்து மண்டல டிஐஜிக்கள், மாவட்ட பதிவாளர்கள், அனைத்து பதிவு அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவினை பொறுத்து முதல் நிலையாக சிஎம்டிஏ/டிடிசிபியால் கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கப்படுகிறது எனவும், இரண்டாம் நிலையாக சம்பந்தப்பட்ட உள்ளாட்சியால் உரிய மேம்பாட்டு கட்டணம்  மற்றும் வரன்முறை கட்டணம் உரிமதாரரிடமிருந்து வசூலிக்கப்பட்ட பின்னர் அங்கீகரிக்கப்படாத மனை பிரிவினை வரன்முறைப்படுத்தி வரன்முறை ஆணை வழங்கப்படுகிறது. மேம்பாடு மற்றும் வரன்முறைக்கான கட்டணம்  வசூலிக்கப்படாத நிலையிலேயே கொள்கை அளவிலான ஒப்புதலின் அடிப்படையில் ஆவணங்கள் பதிவுக்கு அனுமதிப்பதாக கவனத்திற்கு வரப்பெற்றது. இதை தொடர்ந்து டிடிசிபி மற்றும் சிஎம்டிஏ ஆகியோரால் வழங்கப்பட்ட  மனைப்பிரிவு அங்கீகார ஆணை நகலை ஆவணத்துடன் இணைத்து பதிவு செய்யப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டது. சிஎம்டிஏ, டிடிசிபி ஆகியோரால் அனுமதியற்ற மனைப்பிரிவினை வரன்முறைப்படுத்தி உரிய தொகை நகராட்சிக்கு செலுத்தி ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் கொள்கை அளவில் மட்டும் ஒப்புதல்  வழங்கப்படுகிறது எனவும் மேற்கண்டவாறு ஒப்புதல் அளிக்கப்பட்ட மனை பிரிவில் உள்ள மனைகளுக்கு உரிய வரன்முறை கட்டணம் மற்றும் அபிவிருத்தி கட்டணங்கள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சியால் வசூல் செய்யப்பட்ட பின்  தனிப்பட்ட மனைக்கு இறுதி உத்தரவும் வழங்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்டவாறு வரன்முறைப்படுத்தப்பட்டமைக்கான கட்டணம் செலுத்தப்படாமல் கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் அனுமதியற்ற மனைப்பிரிவில் உள்ள மனைகள் பதிவுக்கு அனுமதிக்கப்படுவதாக  புகார் பெறப்பட்டுள்ளது.

அக்டோபர் 11ம் தேதியில் நடைபெற்ற அரசு முதன்மை செயலாளர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை சீராய்வு கூட்டத்தின் போது தெரிவித்தவாறு, சிஎம்டிஏ, டிடிசிபியால் கொள்கை அளவில்  ஒப்புதல் அளிக்கப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவில் உள்ள மனைகளுக்கு சம்பந்தப்பட்ட உள்ளாட்சி துறையில் உரிய மேம்பாட்டு கட்டணம் மற்றும் வரன்முறை கட்டணம் செலுத்தப்பட்ட பின்பு அளிக்கப்பட்ட உள்ளாட்சி  துறையின் இறுதி உத்தரவின் நகலை ஆவணத்துடன் இணைத்து ஒளிவருடல் செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : IGs , The development, paid document,Registration of Registrar: IG Submissions
× RELATED நாளை மறுதினம் நடைபெறும் தேர்தல்...