×

ஆரம்ப அறிகுறிகளும், தவிர்க்க வேண்டியவைகளும் எச்சில், சளியால் 1மீ வரை பன்றிக் காய்ச்சல் பரவும்: சுகாதார அலுவலர்கள் எச்சரிக்கை

நெல்லை: ‘பாதிக்கப்பட்டவர்களின் எச்சில், சளி மூலம் ஒரு மீட்டர் தூரம் வரை பன்றிக் காய்ச்சல் பரவும்’ என சுகாதார அலுவலர்கள் எச்சரித்துள்ளனர்.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் பன்றிக்காய்ச்சல் பரவி,  உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. பன்றிக் காய்ச்சல் குறித்து மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்துள்ளதாவது: பன்றிக் காய்ச்சல் (Flu A H1 N1) நோயானது பாதிக்கப்பட்டவர்களின் எச்சில் மற்றும் சளி துளிகள் மூலம் ஒரு மீட்டர் தூரத்திற்கு பரவக் கூடியது. இது, நேரடியாக பன்றிகள் மூலம் பரவுவது இல்லை. பன்றிக்கா ய்ச்சல் வந்தால் முதல் 3 நாட்களுக்கு ஏற்படும் ஆரம்ப அறிகுறிகளாக தொடர் காய்ச்சல் (102 டிகிரிக்கு மேல்) தும்மல், மூக்கில் நீர்வடிதல், இருமல், தொண்டை வலி மற்றும் எரிச்சலுக்கு மருத்துவ சிகிச்சை முழு நிவாரணம் அளிக்காவிட்டால் தொண்டை தடவல் பரிசோதனை (Throatswab for Flu A H1 N1) செய்யலாம்.

நான்கு நாட்களுக்கு பின் தோன்றக்கூடிய நிமோனியா, மூச்சுத்திணறல், வயிற்றுப்போக்கு, வாந்தி, சோர்வு, தோல் தடிப்புகளுக்கு மருத்துவர் பரிசோதனை, ஆலோசனைப்படி டாமிபுளு சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். மிதமான சுடுநீருடன் உப்பு கரைசலை பயன்படுத்தி ஓரிரு நிமிடங்கள் வாய் கொப்பளித்து, தொண்டையையும், தூய்மையான நீரால் மூக்கு துவாரங்கள், கண்கள், கைகளையும் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். வெதுவெதுப்பான குடிநீரை அடிக்கடி பருக வேண்டும். பொது இடங்களில் இருமுதல், தும்முதல், துப்புதல் செய்யக்கூடாது. இந்த அறிகுறிகள் உள்ளவர்களிடம் கைகுலுக்குதல், அணைத்தல், முத்தமிடுதல் கூடாது. அறிகுறிகள் உள்ளவர்களிடம் ஒரு மீட்டர் தூர இடைவெளியில் பேசவேண்டும். மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை உட்கொள்ளக் கூடாது. இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

தொண்டையில் மில்லியன் வைரஸ்
தொண்டையில் காணப்படும் பல மில்லியன் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களின் தொற்று உப்பு கலந்த மிதமான சுடுநீரால் நன்றாக வாய் கொப்பளிப்பதால் முழுமையாக அகற்றப்படும். பன்றி காய்ச்சல் நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள அடிக்கடி வாய் கொப்பளிப்பது மிகவும் அவசியம். கைகளை சுத்தமாக கழுவுதல் மூலமும் தொற்று நோய்களை தவிர்க்கலாம்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : health officials , Early symptom, saliva, sulfur, swine flu, spread
× RELATED ஆன்லைன் மருந்து விற்பனைக்கு...