×

தமிழக அரசின் அலட்சியத்தால் டெங்கு,பன்றி காய்ச்சலால் 20 பேர் உயிரிழப்பு: என்.ஆர். தனபாலன் கண்டனம்

சென்னை: தமிழக அரசின் அலட்சியத்தால் டெங்கு,பன்றி காய்ச்சலால் 20 பேர் உயிரிழந்தத ற்கு பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன் கண்டனம்  தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் அலட்சியத்தால் டெங்கு காய்ச்சல், பன்றி காய்ச்சல் வேகமாக பரவி ஓரே வாரத்தில் 20 பேருக்கு மேல் உயிரிழந்தது கண்டனத்திற்குரியது.  ஆயிரக்கணக்கோர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். தமிழக அரசு தனது மெத்தன போக்கை கைவிட்டு உடனடியாக பொது மக்களை பாதுகாக்க தேவையான மருத்துவ  நடவடிக்கைகளை விரைவு படுத்த வேண்டும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : state government ,NR ,Dhanapalan , Due to negligence,state government, 20 people died ,dengue,
× RELATED வெடி விபத்தில் இறந்த தொழிலாளர்...