×

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று உண்ணாவிரத போராட்டம்: விக்கிரமராஜா அறிவிப்பு

சென்னை: வணிகர்களை புறக்கணிக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.ம்.விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசுக்கு பல கோடி ரூபாய் வரி வசூலித்து தரும் வணிகர்களை முழுமையாக புறக்கணிக்கும் மத்திய,  மாநில அரசுகளைக் கண்டித்து தமிழகம் முழுவதும்  இன்று மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகில் சென்னை மண்டலத்தலைவர் கே.ஜோதிலிங்கம் தலைமையில் இந்த போராட்டம் நடைபெறும். இந்த உண்ணாவிரதத்தை அகில இந்திய வணிகர் சம்மேளனப் பொதுச் செயலாளர்  பிரவீண் கண்டேல்வால் துவக்கி வைக்கிறார். பேரமைப்பு மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா விளக்கவுரையாற்றுகிறார். மாவட்டத் தலைவர்கள் பி.ஜெயபால், என்.டி.மோகன், என்.ஜெயபால், த.ரவி, பி.ஆதிகுருசாமி, டி.நந்தன்,  ஏ.கிருஷ்ணன், டி.வி.ராதாகிருஷ்ணஷா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மத்தியசென்னை மாவட்டத் தலைவர் எஸ்.சாமுவேல் வரவேற்புரையாற்றுகிறார். இப்போராட்டம் வணிகர் வாழ்வுரிமை காத்திட மட்டுமல்ல, பொது  மக்கள், தொழிலாளர்கள் நலன் காத்திடவும் தான். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : hunger strike ,Tamil Nadu ,announcement ,Wickramarama ,governments ,state , Central, State Government, Tamilnadu, Hunger Struggle, Wickramarajah
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...