×

ரேஷன் அரிசி கடத்தலுக்கு உடந்தையாக இருந்த எத்தனை அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை? உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

சென்னை:  சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சவுஜனா தாக்கல் செய்த மனுவில், ரேஷன் அரிசி கடத்தியதாக என் கணவர் அமர்நாத்தை போலீசார் கைது செய்தனர். எனது கணவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். எனவே, வேலூர் கலெக்டரின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலையில்  ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பி இருந்தனர். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:
அரசுத் தரப்பில் ஆஜரான வக்கீல் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், மனுதாரரின் கணவர் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டுள்ளார். அவர் பலமுறை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரயில் மூலம்தான் தமிழகத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது. பெரிய அளவில் நடைபெறும் கடத்தலை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. மாறாக குறைந்த அளவில் அரிசியைக் கடத்துபவர்களையே அதிகாரிகள் பிடிக்கிறார்கள். ரேஷன் அரிசி இரண்டு முறை வேகவைக்கப்படுகிறது. நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கவே இந்த நடைமுறை பின்பற்றப்படுவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ரேஷன் அரிசி கடத்தல் குறித்து இந்த நீதிமன்றம் தமிழக அரசிடம் கீழ்கண்ட கேள்விகளை எழுப்புகிறது. அதன் விவரம் வருமாறு:தமிழகத்தில் எத்தனை பேருக்கு ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது?. அவர்களுக்கு இலவச அரசி எவ்வளவு வழங்கப்படுகிறது?. வழங்கப்படும் இலவச அரிசி கார்டு வைத்திருப்பவர்களுக்கு போதுமா? இல்லையா?. ரேஷன் அரசி கடத்தலுக்கு உடந்தையாக இருந்த சிவில் சப்ளை துறை அதிகாரிகள், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? எத்தனை பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?.

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் மொத்த இலவச அரிசியின் மதிப்பு என்ன?. இரண்டு முறை வேகவைத்தல் என்ற முறை எதற்காக? கடந்த 10 ஆண்டுகளில் மக்களுக்கு வழங்கப்படும் இலவச அரிசி ஒழுங்காக பயன்படுத்தப்படுகிறதா? இலவச அரிசியை சட்டவிரோதமாக கடத்துபவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? இந்த கடத்தல் பேர்வழிகள் எத்தனை பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? இந்த கேள்விகளுக்கு வரும் நவம்பர் 1ம் தேதி தமிழக அரசு பதில் தரவேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : government officials ,hijackers ,Supreme Court , Ration rice, officials, the Tamil Nadu government, the court volunteer question
× RELATED அமலாக்கத்துறையின் கடும்...