×

கோவில்பட்டி அருகே தவறான உறவால் விபரீதம் : பெண்ணை கொலை செய்து இளைஞர் தற்கொலை

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே பெண்ணை கொலை செய்த ஆண் நண்பர் விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொண்டார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள அந்தோனிராஜிற்கும் அதே பகுதியை சேர்ந்த பாத்திமா மேரிக்கு இடையே தவறான உறவு இருந்ததாக கூறப்படுகிறது.

இது பாத்திமா மேரியின் குடும்பத்தினருக்கு தெரியவந்ததால் அந்தோனிராஜ் இடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று பாத்திமா மேரியை வழி மறித்து தகராறு செய்த அந்தோனிராஜ் அரிவாளால் வெட்டி கொலை செய்தார். பின்னர் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.      


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kavilpatti ,murder , Thoothukudi, Kovilpatti, woman, murder, poison
× RELATED ஜெகன்மோகன் வெற்றி பெறுவார் என்று ரூ.30...