×

ஹஜ் யாத்திரை செல்வோருக்கு ெமக்கா முதல் மதினா வரை புல்லட் ரயில் சேவை: இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் தகவல்

சென்னை: இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் அபுபக்கர் கூறியதாவது: ஹஜ் யாத்திரைக்கு இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து 1,75,368 பேர் பயணம் செய்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை 3865 பேர் பயணம் செய்துள்ளனர். ஹஜ் யாத்திரை செல்லும் பயணிகள் ெமக்காவில் இருந்து மதினாவுக்கு காரில் செல்ல 5 மணி நேரம் ஆகிறது. இந்த நிலையில் ெமக்காவில் இருந்து மதினாவுக்கு புல்லட் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த புல்லட் ரயில் 457 கிலோ மீட்டர் தூரத்தை 300 கிலோ மீட்டர் வேகத்தில் 90 நிமிடங்களில் கடக்கிறது.

இந்த ரயிலில் முதல் வகுப்பு கட்டணம் ரூ2,500, இரண்டாம் வகுப்பு கட்டணம் ரூ1,500 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவையால் பயண நேரம் குறையும். இது ஹஜ் பயணிகளுக்கும், உம்ரா விசாவில் செல்வோருக்கும் மிகவும் பயனுள்ள வகையில் அமைந்துள்ளது. ரயில் சேவையை அளித்த சவுதி அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : pilgrims ,Meekana ,Medina ,Indian Haj Association , Haj pilgrimage, Mamata to Madani, bullet train,
× RELATED உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டதால்...