×

வாகன விபத்து வழக்குகள் தொடர்பான தொலைந்துபோன ஆவணங்களை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும்: சிபிசிஐடி போலீசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: வண்டலூர் - பூந்தமல்லி புறவழிச்சாலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி 9ம் தேதி நடந்த சாலை விபத்தில், மோகன் (54) என்பவர்  பலியானார். இந்த வழக்கில் இழப்பீடு கோரி 3 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன  என்றும், இந்த 3 வழக்குகளுக்கும் பதிலளிக்க எங்களுக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, என்றும் இழப்பீடு தரும் சோழமண்டலம் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ் அளித்த உத்தவு வருமாறு:சென்னை சிறு வழக்குகள் நீதிமன்றங்களுக்கான பதிவாளரிடம் தம்பி என்ற வக்கீல் கடந்த 2017 ஜூன் 7ம் தேதி ஒரு புகார் கொடுத்தார். அதில், வாகன விபத்து வழக்குகள் தொடர்பாக 55 வழக்கு கட்டுகள் மாயமாகி விட்டதாக  தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக தீர்ப்பாய பதிவாளரும், உயர் நீதிமன்ற காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். எனவே, இந்த வழக்குகளை சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்படுகிறது.    உயர் நீதிமன்ற போலீசார் 56 வழக்குகள் தொடர்பான ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும்.  போலி எப்ஐஆர், போலி இழப்பீடு கோரப்பட்டது குறித்து உயர் நீதிமன்ற ஓய்வு பெற் நீதிபதி கே.சந்துரு  தலைமையிலான நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழு தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. விபத்து இழப்பீடு வழக்குகளுக்கான தீர்ப்பாயங்களில் 353 வழக்குகள் இரட்டை இழப்பீடு கோரும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் 111 வழக்குகளில்  மனுதாரர்களுக்கும், அவர்களின் வக்கீல்களுக்கும் வழக்குகளை தள்ளுபடி செய்வது குறித்து நிபுணர் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தற்போது நீதிமன்றங்களில் விசாரணையில் உள்ள வழக்குகளில் பதிவு செய்யப்படும் சாட்சியங்களை சம்மந்தப்பட்டவர்களுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரலுக்கு  உத்தரவிடப்படுகிறது. போலி இழப்பீடு பெற முயன்றவர்கள் மீதான எப்ஐஆர் மீது விசாரணை நடத்த வேண்டும். இரட்டை இழப்பீடு விவகாரத்தில்  இடைத்தரகர்களின் பங்கு, காணாமல் போன வழக்கு கட்டுகள் ஆகியவை குறித்து விரைவாக  விசாரணையை சிபிசிஐடி நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : High Court ,CBCT Police , Related,Find the lost documents quickly, The High Court orders the CBCIT police
× RELATED போதைப்பொருள் தடுப்பு தொடர்பான அரசின்...