×

விபத்து குறித்து விசாரணை நடத்தப்படும், அதன் பிறகே முழுவிவரம் தெரியவரும் : திருச்சி விமான நிலைய அதிகாரிகள்

திருச்சி : திருச்சியில் சுவரை இடித்துக்கொண்டு சென்ற விமானம் மும்பையில் தரையிறக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து திருச்சி விமான நிலைய நிர்வாக ஆணையர் குணசேகரன் பேட்டி அளித்துள்ளார். அப்போது விபத்துக்குள்ளான விமானத்தில் சென்ற பயணிகளுக்கு மும்பையில் இருந்து துபாய்க்கு செல்ல மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும் மின் விளக்கு கோபுரத்தில் விமானம் மோதியவுடன் விமானியிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது என்றும் அவர் விமானத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரிவித்து தொடர்ந்து விமானத்தை இயக்கினார் என்றும் விமான நிலைய இயக்குனர் கூறினார். மேலும் விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும், அதன் பிறகே முழுவிவரம் தெரியவரும் என்றும் இயக்குனர் தெரிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : inquest ,accident , Trichy, Gunasekaran, Trichy Airport, Full Division
× RELATED டெல்லி மருத்துவமனை தீ விபத்தில் 7...