சென்னை: ஜி.கே.மூப்பனாரின் 17ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மறைந்த ஜி.கே.மூப்பனாரின் 17ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கம் பின்புறம் உள்ள அவரது நினைவிடம் நேற்று மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தமாகா தலைவர் ஜி.கே.வாசன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து கட்சியின் மூத்த துணை தலைவர் ஞானதேசிகன், துணை தலைவர்கள் கோவை தங்கம், கத்திப்பாரா ஜனார்த்தனன், மாநில நிர்வாகிகள் விடியல் சேகர், என்.டி.எஸ்.சார்லஸ், இ.எஸ்.எஸ்.ராமன், முன்னாள் எம்.பி. சித்தன், ரயில்வே ஞானசேகரன், ஜவஹர்பாபு, பாலசந்தானம், ஆர்.எஸ்.முத்து, முனவர் பாட்சா, தி.நகர் கோதண்டன், தலைமை நிலைய செயலாளர்கள் ஜி.ஆர்.வெங்கடேஷ், ஆர்.சீனிவாசன், அசோகன், டி.எம்.பிரபாகரன், திரைப்பட தயாரிப்பாளர் ஜெ.எஸ்.கே.சதீஷ் குமார், ராஜமகாலிங்கம், யுவராஜ், அனுராதா அபி, கே.கக்கன், மாவட்ட தலைவர்கள் கொட்டிவாக்கம் முருகன், சைதை மனோகரன், விக்டரி மோகன், அருண்குமார், பிஜு சாக்கோ மற்றும் நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து, திமுக முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், நடிகர் எஸ்.வி.சேகர், விசிக மாவட்ட தலைவர் செல்லதுரை, மக்கள் தேசிய கட்சி தலைவர் சேம நாராயணன், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர் தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ், கஜநாதன், தாமோதரன், மயிலை தரணி, மாவட்ட தலைவர்கள் சிவராஜசேகரன், வீரபாண்டியன், உட்பட பல்வேறு கட்சி தலைவர்கள் அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, தமாகாவினர் சார்பில் ஏழை எளியவர்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக, அவரது நினைவிடத்தின் பின்புறத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் அரங்குகள் அமைத்து நலத்திட்ட உதவிகளுக்கு ஏற்பாடு செய்தனர். அதை ஜி.கே.வாசன் தொடங்கி வைத்தார். பின்னர் ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி
