×

இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழிகள் பட்டியில் இந்தி முதலிடம்: ஆய்வில் தகவல்

புதுடெல்லி: இந்தியாவில் எந்தெந்த மொழி எவ்வளவு பேரால் பேசப்படுகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. மொழிவாரியாக 2011ம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஆய்வு தகவல் தற்போது தெரியவந்துள்ளது. இந்தியாவில் இந்தி பேசுவோரின் 43.63% ஆக உயர்ந்துள்ளது. இது 2001ம் ஆண்டில் 41.03% இருந்துள்ளது. பெங்காலி மொழி 2வது இடத்தை பிடித்துள்ளது. 4வது இடத்தில் இருந்த மராத்தி மொழி 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 3வது இடத்தில் இருந்த தெலுங்கு மொழி 4வது இடத்திற்கு சென்றுள்ளது. பெங்காலியை தாய்மொழியாக கொண்டவர்கள் சுமார் 8.3 சதவிகித்தினர் ஆவர். மராத்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் 7.01 சதவிகிதமும், தெலுங்கு மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் 6.93 சதவிகிதமும் உள்ளனர். இந்த வரிசையில் தமிழ் மொழி 5வது இடத்தில் உள்ளது.

2001ம் ஆண்டிலும் அதே இடம் தான். ஆனால் 2001ம் ஆண்டு தமிழ்மொழியை தாய்மொழியாக கொண்டவர்களின் எண்ணிக்கை 5.91% ஆக இருந்து 2011ம் ஆண்டு 5.89% ஆக குறைந்துள்ளது. அட்டவணையிடப்பட்ட இந்தியாவில் 21 மொழிகளில் சமஸ்கிருதமும் இடம்பெற்றுள்ளது. சமஸ்கிருத மொழியை தாய்மொழியாக கொண்டு சுமார் 24,821 பேர் பேசுவதாக தெரியவந்துள்ளது. போடோ, மணிப்பூரி, கொங்கணி, மற்றும் டோக்ரி மொழி பேசுபவர்களை விட சமஸ்கிருத மொழியை பேசுபவர்களின் எண்ணிக்கை குறைவாகும். அட்டவணையிடப்படாத மொழியாக கருதப்படும் ஆங்கில மொழியை முதன்மையாக பேசுபவர்கள் சுமார் 2,50,000 பேர் என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 1,06,000 பேர் மகாராஷ்டிராவில் உள்ளனர். இதற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு 2ம் இடத்திலும், கர்நாடகா 3ம் இடத்திலும் உள்ளன.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED 16 கி.மீ தூரம் கொண்ட புல்மேடு வனப்...