×

கோயில் அருகே மது அருந்துவதை தடுக்க கோரிய வழக்கு தள்ளுபடி

சென்னை: சேலம் இருட்டுக்கல் முனியப்பன் கோயிலை சுற்றி மது அருந்துவதை தடுக்க மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சேலத்தை சேர்ந்த ஆ.ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், சேலம் மாவட்டம் வளையகாரனூர் இருட்டுக்கல் முனியப்பன் கோயிலை சுற்றியும் மது அருந்துபவர்கள் காலிபாட்டில்களை வீசி செல்கிறார்கள். வனப்பகுதியில் மரக்கிளைகள் வெட்டப்பட்டு எரியூட்டப்படுகிறது. அந்த வழியாக செல்லும் பெண்களிடம் மதுபோதையில் இருப்பவர்கள் தகராறில் ஈடுபடுகிறார்கள். இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் உரிய ஆய்வுகளை மேற்கொண்டு வனப்பகுதியை பாதுகாக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு வழிபாட்டு முறை உள்ளது. பெண்களுக்கு தொல்லை அளிக்கப்படும் குற்றச்சாட்டுகளை மனுவில் முறையாக விளக்கம் அளிக்கவில்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்….

The post கோயில் அருகே மது அருந்துவதை தடுக்க கோரிய வழக்கு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Irutukkal Muniappan ,
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...