×

வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கறி விருந்து நடத்திய அதிமுகவினர்

வத்திராயிருப்பு: தேர்தல் விதிமுறைகளை மீறி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அதிமுகவினர் கறி விருந்து வழங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வத்திராயிருப்பு அருகே தம்பிபட்டியில் திருவில்லிபுத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் மான்ராஜ் அறிமுக கூட்டம் நேற்று முன்தினம்  நடந்தது. கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியினர் மத்தியில் வேட்பாளரை அறிமுகப்படுத்தி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார். கூட்டத்திற்கு பின் கிடா விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சாப்பிட இடம்பிடிக்க ஒருவரையொருவர் முண்டியடித்து கொண்டு சென்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தேர்தல் நடத்தை விதிகளை மீறி கறி விருந்து வழங்கிய அதிமுகவினர் மீது தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன….

The post வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கறி விருந்து நடத்திய அதிமுகவினர் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Vathirayiru ,Thambipatti ,Vathirayirupu ,Dinakaran ,
× RELATED வத்திராயிருப்பில் நெல் கொள்முதல்...