சென்னை: அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் அதிக அளவில் பொதுமக்கள் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு மட்டும் கடந்தாண்டு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதேபோன்று கடந்த ஜனவரி 7ம் தேதி முதல் ஜனவரி 23ம் வரை வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டன. கோயில்களில் பக்தர்களுக்கான தரிசனம் ரத்து செய்யப்பட்டு மூடப்பட்ட நிலையில், பொது ஏலம் மற்றும் ஒப்பந்தப்புள்ளி நடத்தப்பட்டு தொகை முழுவதும் வசூல் செய்யப்பட்டு ஆண்டுதோறும் நடைபெறும் பலவகை உரிம இனங்களின் உரிமைதாரர்களுக்கு இழப்பு ஏற்பட்ட 36 நாட்களுக்கு ஈடாக அந்தந்த கோயில் நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் 36 நாட்களுக்கு காலநீட்டிப்பு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.கோயில் செயல் அலுவலர்கள் ஏலதாரர்களுக்கு உரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், தொகை முழுவதும் வசூல் செய்யப்பட்ட இனங்களுக்கு மட்டும் காலநீட்டிப்பு வழங்கப்பட வேண்டும். தொகை முழுவதும் வசூல் செய்யப்படாத இனங்களுக்கு காலநீட்டிப்பு வழங்கப்பட்டால் ஏற்படும் இழப்பிற்கு தொடர்புடைய அலுவலரே பொறுப்பாக்கப்படுவார்.உரிம இனங்களுக்கு கால நீட்டிப்பு வழங்கப்படும் நாட்கள் போக மீதமுள்ள நாட்களுக்கு கோயிலுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு வழக்கமான பொது ஏலம் மற்றும் ஒப்பந்தப்புள்ளி திறப்பிற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கால நீட்டிப்பு வழங்கப்படும் காலம் முடிந்த மறுநாள் முதலே அந்தந்த உரிமங்களுக்கு அங்கீகரிக்கப்படும்….
The post கொரோனாவின்போது ஏற்பட்ட வருவாய் இழப்பை கருத்தில் கொண்டு ஏலம் எடுத்தவர்களுக்கு 36 நாளுக்கு ஒப்பந்த காலம் நீட்டிப்பு appeared first on Dinakaran.
