×

நள்ளிரவில் வீடு புகுந்து செல்போன்கள் திருட்டு

 

பெரம்பூர், மார்ச் 16: கொடுங்கையூர் எருக்கஞ்சேரி ராஜிவ் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் பாபு (49). இவரது சொந்த ஊர் திருச்சி. கடந்த ஒரு மாதமாக ரூம் எடுத்து தனது நண்பர்களுடன் கட்டுமான வேலைகள் செய்து வருகிறார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு இவர் மற்றும் நண்பர்கள் மோகன், சந்திரசேகர் ஆகியோர் சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றனர்.

நேற்று முன்தினம் காலை எழுந்து பார்த்தபோது மூன்று பேரின் செல்போன்களும் காணாமல் போய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது நள்ளிரவில் சைக்கிளில் வந்த மர்ம நபர் இவர்களது அறைக்கு வந்து மூன்று செல்போன்களையும் திருடி சென்றது சிசிடிவியில் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் பாபு கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Tags : PERAMPUR ,BABU ,KODUNGAIUR ,ERUKHANJERI ,RAJIV GANDHI NAGAR AREA ,
× RELATED உரிய ஆவணமின்றி ரயிலில் கொண்டு வந்த ரூ.80 லட்சம் பறிமுதல்