சென்னை: அர்ஜுன் தாஸ், தேஜு அஸ்வினி, சாண்டி மாஸ்டர் நடிக்கும் படம் ‘சூப்பர் ஹீரோ’. படம் குறித்து அறிமுக இயக்குனர் விக்னேஷ் வேணுகோபால் கூறியது: ஹீரோவுக்கு ஒரு தம்பி இருக்கிறார். வில்லனுக்கு ஒரு அண்ணன் இருக்கிறார். ஹீரோவின் பலம், பலவீனம் இரண்டும் அவனது தம்பிதான். அதேபோல்தான் அண்ணன் மீது உயிராக இருக்கிறான் வில்லன்.
இந்த எமோஷன் ரிலேஷன்ஷிப்பில் ஏற்படும் பிரச்னையால் ஒரு கட்டத்தில் ஹீரோவும் வில்லனும் மோதுவதுதான் கதை. ஹீரோவாக அர்ஜுன்தாஸ், வில்லனாக சாண்டி மாஸ்டர் நடிக்கிறார். கதைப்படி, அர்ஜுன் தாஸ் ஒரு மெக்கானிக். தம்பிக்காக அவர் சூப்பர் ஹீரோவாக மாறுகிறார். படப்பிடிப்பு முடிந்துவிட்டது. பர்ஸ்ட் லுக் வெளியாகி, ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது. செப்டம்பரில் படம் வெளியாகும். சோல்ஜர்ஸ் பிலிம் பேக்டரில் சார்பில் கே.எஸ்.சினிஷ் உடன் இணைந்து ரெடாக்டட் ஸ்டுடியோஸின் ஷான்ஜன் ஜி தயாரித்துள்ளார்.
