×

பிரதீப் ரங்கநாதன் படத்துக்கு 6 இயக்குனர்கள்

சென்னை: ‘லவ் டுடே’, ‘டிராகன்’, ‘டியூட்’, ‘எல்ஐகே’ படங்களில் ஹீரோவாக நடித்த பிறகு பிரதீப் ரங்கநாதன் தற்போது தயாரிப்பாளராக களமிறங்கியுள்ளார். பிஆர் ஷோ என்கிற தனது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இப்படத்தில் மமிதா பைஜூ கதையின் நாயகியாக நடிக்கிறார். மேலும், இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து, ஸ்வாசிகா, அனாமிகா மஹி ஆகியோர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தை பிரதீப் ரங்கநாதனின் அசிஸ்டென்ட் இயக்குனர்கள் டீமில் உள்ள 6 பேர் இயக்குகிறார்கள். இவர்களுக்கு அல்ஃபா யூனிட் என அவர் பெயர் சூட்டியிருக்கிறார். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. படத்தை தயாரிப்பதுடன் கதையும் அவரே எழுதியிருக்கிறார்.

Tags : Pradeep Ranganathan ,Chennai ,PR Show ,Mamita Baiju ,Aswath Marimuthu ,Swasika ,Anamika Mahi ,Sai Abhyangaar ,
× RELATED சூப்பர் ஹீரோ ஆனார் அர்ஜுன் தாஸ்