×

மூன்று கும்பாபிஷேகங்கள் (புதுடில்லி, நொய்டா)

முருகன் கோயில்: 21-8-2022செக்டர் 62, நொய்டாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக முருகன் கோயில் உள்ளது. இங்கு மூலவர், கார்த்திகேயன் என்னும் பெயரில் வீற்றிருக்கிறார். மேலும், விநாயகர், சந்திரமௌளீஸ்வரர், திரிபுரசுந்தரி அம்மன், நவகிரகம், ஸ்ரீசாந்த ஆஞ்சநேயர் மற்றும் ராம பரிவாரங்களும் நிறுவப்பட்டு இருக்கின்றன. வராவாரம் லலிதா சஹஸ்ரநாமம், விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணங்கள் நடந்து வருகிறது. இந்த ஆலயத்தில் வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.இஷ்ட சித்தி விநாயகர் கோயில், 24-08-2022பேஸ்  3 மயூர் விஹாரில், 30 வருடங்களாக எண்ணற்ற பக்தர்களின் நியாயமான  கோரிக்கைகளை பூர்த்தி செய்து, அவர்களுடைய இஷ்ட தெய்வமாக விளங்கி வருகிறது,  இஷ்ட சித்தி விநாயகர் ஆலயம். இந்த ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி அன்று பல  விதமான கொழுக்கட்டைகளை படையலிட்டு, பக்தர்களுக்கு விநியோகம்  செய்யப்படுகிறது. அன்று மாலையில் பாடல், இசை, நடனம் என அனைத்து விதமான  நிகழ்ச்சிகளும் நடைபெறும். வரும் ஆகஸ்ட் 24 ஆம் தேதியன்று இந்த கோயிலின்  கும்பாபிஷேகம் மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது.ஸ்ரீசங்கடஹர கணபதி கோயில் 7-9-2022 கிழக்கு டெல்லி வசுந்தரா கோயிலிலுள்ள சங்கடஹர கணபதி கோயிலில், சங்கடஹர கணபதி ஒரே கிரானைட் கல்லினால் வடிவமைக்கப்பட்டுள்ளது. வடஇந்தியாவிலேயே உயரமான, கனமான சிலையாகக் கருதப்படுகிறது. இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களின் சங்கடங்களை நிவர்த்திசெய்கிறார் இந்த சங்கடஹர கணபதிக்கு அடுத்த மாதம், செப்டம்பர் 7 ஆம் தேதி மஹாகும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.தொகுப்பு : எஸ்.வெங்கடேஷ்

The post மூன்று கும்பாபிஷேகங்கள் (புதுடில்லி, நொய்டா) appeared first on Dinakaran.

Tags : Kumbabishekas ,New Delhi, Noida ,Murugan Temple ,Noida ,Karthigayan ,Kumbaphishekas ,
× RELATED பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை நாளை ரத்து