×

மாணவர்கள் கல்வியில் மேம்பட என்ன செய்யலாம்?

ஔவையின் சொற்களுக்கேற்ப கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும். கல்வியின் சிறப்பை இதைவிட சொல்ல முடியாது. கல்விதான் ஒரு தனிமனிதனின் அறிவையும் ஞானத்தையும் வளர்க்கும் வாழ்வை வளமாக்கும். கல்வி எனும் செல்வத்தை எந்தவகையிலும் களவாட முடியாது. ெதாலைந்தும் போகாது காலம் உள்ள ஒரு மனிதனுடன் தொடர்ந்து வந்து வாழ்வு சிறக்க வழிகாட்டும் என்பது நிதர்சனமான உண்மை. கல்வியைவிடவும் ஒரு சிறந்த சொத்து குழந்தைகளுக்கு இல்லை. அவர்கள் படிக்கும் காலத்தில் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து எப்படி கல்வியை புகட்டுதலே சிறந்த செயல். கல்வி தடை ஏற்படாமலும் கல்வியில் தடைகள் விலகவும் சிறப்பாக கல்வியை பயில ஜோதிட ரீதியாக சில வழிமுறைகள்.

மேஷ ராசிக்காரர்கள்: வெள்ளிக்கிழமை தோறும் தொடர்ந்து லிங்க ரூபத்தில் இருக்கும் சிவ பெருமானுக்கு சிவஸ்ேதாத்திரம் பாராயணம் ெசய்து வழிபட கல்வி மேம்படும். ஞாபக மறதியும் சிந்தனை சிதறல்களும் தவிர்க்கப்படும். நல்ல படிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

ரிஷப ராசிக்காரர்கள்: புதன் கிழமைதோறும் நாக சுப்ரமணியரை கந்த சஷ்டி கவசம் படித்து வழிபாடு செய்யவும். கல்வி வளம்பெறும். படித்துக் கொண்டிருக்கும் போது வேறு விஷயங்களில் பேச்சுகள் திரும்பலாம் அதனால் நேரம் விரயமாவதற்கு வாய்ப்புகள் உண்டு.

மிதுன ராசிக்காரர்கள்: திங்கட்கிழமை தோறும் சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபாடு செய்து சனி ஸ்தோத்திரம் பாராயணம் செய்து ஊனமுற்றவர்களுக்கு கோதுமையில் செய்த உணவை தானம் செய்யுங்கள். உங்கள் மனம் விளையாட்டை நோக்கியும் கேளி்க்கைகளிலும் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டு. அதிலிருந்து விடுபட்டு படிப்பதற்கு நல்ல சூழ்நிலைகள் உருவாகும்.

கடக ராசிக்காரர்கள் : புதன் கிழமைதோறும் அறுகம்புல் மாலை கொண்டு ஆற்றங்கரையிலோ அல்லது அரச மரத்தின் கீழ் உள்ள விநாயகருக்கு ஏழு குடம் நீரை அபிஷேகம் செய்து விநாயகர் அகவல் பாராயணம் செய்தால் இப்பொழுது உங்களுக்கு உள்ள துன்பங்கள் குறையும் மனோதிடம் அதிகமாகி கல்வியில் நாட்டம் உருவாகும்.

சிம்மம் ராசிக்காரர்கள்: செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் சீரடி சாய்பாபாவை வழிபடுங்கள். விஷ்ணு ஸ்தோத்திரம் பாராயணம் சொல்லுங்கள் அல்லது ஹயகீரிவரை வழிபடுங்கள் உங்களுக்கு உள்ள கல்வி தடைகள் விலகும். உங்களுக்கு குருவாகிய ஆசிரியருக்கு மஞ்சள் வஸ்திரம் வழங்கி அவரின் ஆசியை பெறுங்கள்.

கன்னி ராசிக்காரர்கள்: ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் லட்சுமி நாராயணரை வழிபடுங்கள். வறுமையில் கோரப்பிடியில் இருப்பவர்களுக்கு 4 கிலோ துவரம் பருப்பு தானமாக கொடுங்கள். உங்களின் சுகம் மேம்படும். முயற்சிகளுக்கான தடைகள் நீங்கி கல்வியை சிறப்பாக கற்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

துலாம் ராசிக்காரர்கள்: வியாழன் தோறும் தட்சிணாமூர்த்தியை கொண்டைக்கடலை மாலை தொடுத்து வழிபாடு செய்யுங்கள். முடிந்தால் கொண்டைக் கடலை நெய்வேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகம் செய்துவிட்டு வாருங்கள். தடைகள் விலகி கல்வி கற்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும்.

விருச்சிகம் ராசிக்காரர்கள்: வியாழன் தோறும் கணபதி சுப்ரமணியரை வழிபாடு செய்யுங்கள். அவ்வாறான கோயில் இல்லாவிடில் கணபதியையும் சுப்ரமணியரையும் தனித்தனியாக நாட்டுச் சர்க்கரையால் செய்யப்பட்ட உணவை நெய்வேத்தியம் செய்து பக்தர்களுக்கு கொடுங்கள். கல்வி தடைகள் நீங்கி பொருளாதாரத் தடைகளும் விலகி கல்வி கற்பதற்கு யாரேனும் உதவுவார்கள்.

தனுசு ராசிக்காரர்கள்: சனிக்கிழமை ராகு காலத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரரை சிவபுராணம் பாராயணம் செய்து வழிபாடு செய்யுங்கள். சுவாமிக்கும் அம்பாளுக்கும் தயிர் சாதம் அல்லது லெமன் சாதம் நெய்வேத்தியம் செய்து பக்தர்களுக்கு கோயிலில் விநியோகம் செய்யுங்கள். கல்விக்கான முயற்சிகள் வெற்றி வாய்ப்பாக மாறும். வாகனங்களில் பயணிக்கும் போது வேகத்தை குறைத்து கொள்வது நலம் பயக்கும்.

மகரம் ராசிக்காரர்கள்: ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை அன்று சனி பகவானுக்கு அர்ச்சனை செய்து சனி ஸ்தோத்திரம் பாராயணம் செய்து வழிபட பொருளாதாரத் தடைகள் விலகும் மேலும், மிகவும் வறுமையில் இருக்கும் நான்கு நபர்களுக்கு சாம்பார் சாதம் தானமாக வழங்குங்கள். கல்வியில் தொடர்பான முயற்சிகள் உங்களுக்கு கைகொடுக்கும்.

கும்பம் ராசிக்காரர்கள்: ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் கருமாரியம்மனுக்கு புளிசாதம் நெய்வேத்தியம் செய்து மாரியம்மனின் பாடல்களை பாராயணம் செய்து வழிபடுங்கள் முயற்சிகள் யாவும் திருப்பு முனையாக அமையும். புளிசாதம் நெய்வேத்தியத்தை குறைந்தது பதிமூன்று நபர்களுக்கு கொடுங்கள்.

மீன ராசிக்காரர்கள்: ஒவ்வொரு வாரம் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் அஷ்டலட்சுமி கோயிலில் வழிபாடு செய்யுங்கள். லட்சுமி ஸ்தோத்திரம் பாராயணம் செய்யுங்கள். இனிப்பான பொருட்களை நெய்வேத்தியம்
செய்து பக்தர்களுக்கு விநியோகம் செய்யுங்கள். உங்களுக்கு கல்வி புதிய சிந்தனை உருவாக்கும். புது உற்சாகம் பிறக்கும்.

The post மாணவர்கள் கல்வியில் மேம்பட என்ன செய்யலாம்? appeared first on Dinakaran.

Tags : Auwai ,Karkai ,Karkai Nandre ,Dinakaran ,
× RELATED எங்கு யாரைப் புகழ வேண்டும்?