×

10 நாட்கள் 10 பெயர்கள் பரவசமூட்டும் ஓணம்

நன்றி குங்குமம் ஆன்மிகம் கானம் விற்றாவது ஓணம் உண்’ என்பது கேரள பழமொழி. ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் ‘ஓணம் சத்யா’ என்ற நிகழ்ச்சியின் சிறப்பை உணர்த்துவதாகும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு 64-வகையான சிறப்பு உணவுகள் தயாரிக்கப்படும். இப்படி வகைவகையாக தயாரிக்கப்படும் உணவுகள் கடவுளுக்குப் படைக்கப்படும்.ஓணம் திருநாள் தொடர்ச்சியாக 10 நாட்கள் வெகு சிறப்பாக, விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஓணம் பண்டிகையில் ஒவ்வொரு நாளுக்கும் தனித்தனி பெயர் கொடுத்து கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன என்பதுதான் சிறப்பிலும் சிறப்பாகும்.பண்டிகையின் முதல் நாள் அத்தம் என்றும், இரண்டாம் நாள் சித்திரா என்றும் மூன்றாம் நாள் சுவாதி என்றும் அழைக்கப் படுகிறது. இந்த நாட்களில் பெரிய அளவில் பூக்களால் அந்தப் பூ கோலங்கள் போடுவதும், கேரள மக்கள் ஒருவருக்கொருவர் பரிசுகள் கொடுத்தும் மகிழ்வர்.நான்காம் நாளான விசாகத்தில் ஒன்பது சுவைகளில் உணவு தயார் செய்யப்படுகிறது. குறைந்தபட்சம் 64- வகையான உணவுகள் தயாரித்து இறைவனுக்குப் படைக்கிறார்கள். இதனை ‘ஓணம் சத்யா’ என்பர். ஓணம் பண்டிகையில் இந்த ஓணம் சத்யா மிகவும் சிறப்பிடம் பெற்றுத் திகழ்கிறது.ஐந்தாம் நாள் அனுஷம் எனப்படும். அன்றைய தினம்கேரளாவின் பாரம்பரியமான படகுப் போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியில் பங்கு பெறுவோர் வஞ்சிப்பாட்டு என்ற பாடலைப் பாடியபடி துடுப்பு போட்டு செலுத்துவார்கள். இதனைக் காண கேரளா மட்டுமின்றி பாரத நாடெங்குமிருந்தும் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமானவர்கள் வந்து குவிகிறார்கள்.ஆறாம் நாள் விழா திரிக்கேட்டா என்றும், ஏழாம் நாள் மூலம் என்றும், எட்டாம் நாள் பூராடம் என்றும், ஒன்பதாம் நாள் உத்திராடம் என்றும் அழைக்கப்படும். பத்தாம் நாள் திருவோணம். இன்றைய தினம் தான் மகாபலி சக்கரவர்த்தி தன்னுடைய நாட்டு மக்களைப் பார்ப்பதற்காக வருகை புரிவதாக ஓணம் திருநாள் வரலாறு கூறுகிறது.    கேரள விழாக்களில் யானைகளுக்கு தனி இடம் உண்டு. அந்த வகையில் ஓணம் திருவிழாவிலும் யானைத் திருவிழா நடத்தப் படுகிறது. 10-ம் நாளான திருவோணம் அன்று விலை உயர்ந்த பொன் மற்றும் மணிகளாலான கவசங்களாலும் தோரணங்களாலும் யானைகளை அலங்கரித்து வீதிகளில் ஊர்வலமாக கொண்டு வருவார்கள்.தொகுப்பு: வேல்ரத்னம்

The post 10 நாட்கள் 10 பெயர்கள் பரவசமூட்டும் ஓணம் appeared first on Dinakaran.

Tags : Kerala ,Oranam ,Oven ,
× RELATED ஜூன் 3ல் பாபா ராம்தேவ் ஆஜராக கேரள நீதிமன்றம் ஆணை