×

ராகு – கேது பொதுப் பலன்கள் 1.9.2020 முதல் 7.3.2022 வரை

நிகழும் மங்களகரமான ஸ்ரீ சார்வரி வருஷம் ஆவணி மாதம் 16ம் தேதி 1.9.2020 அன்றைய தினம் செவ்வாய்க் கிழமை அவிட்ட  நட்சத்திரம், கும்ப ராசி, பெளர்ணமி அன்று மதியம் 2.16க்கு ராகு – கேது பெயர்ச்சி நடைபெறுகிறது. ராகு ரிஷப ராசிக்கும், கேது விருச்சிக ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். இவர்கள் இருவரும் 7.3.2022 வரை இந்த ராசிகளில் இருந்து பலன்களை தருவார்கள். நிழல் கிரகங்கள் என்று அழைக்கப்படும் ராகு யோகத்திற்கும், போகத்திற்கும், கேது ஆன்மிகத்திற்கும், மோட்சத்திற்கும், கோடீஸ்வர யோகத்திற்கும் அதிகாரம் பெற்றவர்கள். இவர்கள் நம் பரம்பரை முன்னோர்கள்பற்றிச் சொல்லும் கிரகங்களாகும். ராகுவின் மூலம் தந்தை வழிகளையும், கேதுவின் மூலம் தாயார் வழிகளையும் தெரிந்து கொள்ளலாம்.ராகு – கேது இருவரும் திருமண சம்பந்தமான தோஷங்களை கொடுக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், தார தோஷம், பிதுர் தோஷம், புத்திர தோஷம் போன்றவையாகும். அதேபோன்று யோகத்தையும், ஞானத்தையும், கல்வி அறிவையும், திருமணம், குழந்தை பாக்கியம், வெளிநாடு வாசம், மற்றும் நம் கர்ம. வினைகளுக்கு காரகம் பெற்றவர்கள். இந்த ராகு – கேது பெயர்ச்சி நம் நாட்டிற்குச் சாதகமான அம்சங்களை கொடுக்கும். உலக அரங்கில் இந்தியாவின் கை ஓங்கும். மழைப் பொழிவு அதிகமாக இருக்கும். அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வழியும். பொருளாதாரத்தில் வளர்ச்சி, படிப்படியான மாற்றங்கள் வரும். ராஜாங்க சம்பந்தமான விஷயங்கள் ஏற்றம் பெறும். ராணுவம் அசுர வளர்ச்சி அடையும். ரியல் எஸ்டேட் துறை கொஞ்சம் கொஞ்சமாக உச்சம் அடையும். அரசாங்கத்திற்கு பூமிக்கு அடியில் புதையல் கிடைக்கும். தகவல் தொழில் நுட்பம், செல்போன் எலக்ட்ரானிக், எலக்ட்டிரிக்கல் சம்பந்தமான விஷயங்கள் வளர்ச்சியடையும். மருத்துவத் துறையில் அபார வளர்ச்சி இருக்கும். புதிய மருந்துகள், தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வரும். இயற்கை மருத்துவம், சித்தா, யுனானி, மூலிகை பயன்பாடுகள் அதிகரிக்கும். உணவு முறையில் மாற்றங்கள் வரும். மக்களுக்கு பக்தி மார்க்கத்தில் நாட்டம் அதிகரிக்கும். பிரசித்திப் பெற்ற கோயில்களிலும், புண்ணியத் தலங்களிலும் கூட்டம் அதிகமாகும். இந்த ராகு – கேது பெயர்ச்சி எல்லோருக்கும் நல்ல மாற்றங்களைத் தந்து நிறைவாக அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி, வணங்கி பிரார்த்திக்கிறேன்.ஜோதிட முரசு மிதுனம் செல்வம்ராகு – கேது பெயர்ச்சி சஞ்சார அம்சங்கள்1.9.2020 அன்று ராகு பெயர்ச்சியாகி சுக்கிரன் வீடாகிய ரிஷபத்தில் வந்து அமர்கிறார். கேது பெயர்ச்சியாகி செவ்வாய் வீடாகிய விருச்சிகத்தில் வந்து அமர்கிறார். ஒன்றரை வருடங்கள் இந்த ராசிகளில் அமர்ந்து பலன்களை தருவார்கள்.ராகு, மிருகசீரிடம், ரோகிணி, கிருத்திகை என்ற மூன்று நட்சத்திர பாத சாரத்தில் சஞ்சாரம் செய்ய இருக்கிறார். இது முறையை செவ்வாய், சந்திரன், சூரியன் மூவரும் ஆகிய கிரகங்களின் நட்சத்திரங்களாகும்.கேது, கேட்டை, அனுஷம், விசாகம் என்ற மூன்று நட்சத்திர பாத சாரத்தில் சஞ்சாரம் செய்ய இருக்கிறார். இது முறையே புதன், சனி, குரு மூவரும் ஆகிய கிரகங்களின் நட்சத்திரங்களாகும். இதன் அடிப்படையில் ராகு – கேது வின் பலன்கள் அமையும்….

The post ராகு – கேது பொதுப் பலன்கள் 1.9.2020 முதல் 7.3.2022 வரை appeared first on Dinakaran.

Tags : Rahu – Ketu ,Sri Charvari ,Rahu ,Ketu ,
× RELATED கபாலீஸ்வரர் கோயில் சிலை: குற்றப்பத்திரிகை ரத்து கோரிய வழக்கு தள்ளுபடி