×

90 சதவீதம் அறிகுறி இல்லாத கண் விழி விறைப்பு நோயாளிகளை இந்தியா அதிகளவு கொண்டிருக்கும்: நிபுணர்கள் தகவல்

சென்னை: டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் பிராந்திய மருத்துவ இயக்குநர் டாக்டர் ஆர்.கலாதேவி சதீஷ் கூறியதாவது. எந்த அறிகுறியும் வெளிப்படுத்தாத கண்விழி விறைப்பு நோயால் பார்வைத்திறனிழப்பு வராமல் தடுக்க ஒரே வழிமுறை, ஆரம்ப நிலையிலேயே பாதிப்பை கண்டறிந்து சிகிச்சை அளிப்பது. மார்ச் 7 முதல் 13 வரை அனுசரிக்கப்படும் கண்விழி விறைப்பு நோய் வாரத்தில் வெளியிடப்பட்ட ஒரு செய்தியில், 1.6 மில்லியன் குழந்தைகள் உட்பட 40 மில்லியன் பேர், பார்வைத்திறனற்றவர்களாக அல்லது பார்வைத்திறன் பாதிப்புள்ளவர்களாக இருக்கின்றனர். 90% நோயறிதல் செய்யப்படாத கண் விழி விறைப்பு நோயாளிகளை இந்தியா அதிகளவு கொண்டிருக்கும், என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்தியாவில் பார்வைத்திறனிழப்புக்கான 3வது காரணமாக கண்விழி விறைப்பு நோய் இருக்கிறது. குடும்பத்தில் கண்விழி விறைப்பு நோய், நீரிழி உள்ளவர்கள், 40 வயதுக்கு மேற்பட்டோர், ஒளிக்கதிர் விளக்க குறைபாடுள்ளவர்கள், ஸ்டெராய்டு மருந்துகள், கண் சொட்டு மருந்துகள், மாத்திரைகள் மற்றும் சரும கிரீம்களை பயன்படுத்துபவர்கள் ஆண்டுதோறும் கண்விழி விறைப்பு நோய் பரிசோதனை செய்ய வேண்டும். உரிய காலத்தில் தவறாமல் கண் பரிசோதனை செய்தால் கண்விழி விறைப்பு நோயை ஒழிக்க முடியும், என்றார்….

The post 90 சதவீதம் அறிகுறி இல்லாத கண் விழி விறைப்பு நோயாளிகளை இந்தியா அதிகளவு கொண்டிருக்கும்: நிபுணர்கள் தகவல் appeared first on Dinakaran.

Tags : India ,Chennai ,Dr. ,R. Kaladevi Satish ,Regional Medical Director ,Aggarwal's Eye Hospital ,Dinakaran ,
× RELATED I.N.D.I.A கூட்டணி கட்சித் தலைவர்கள் மாலை 4 மணிக்கு தேர்தல் ஆணையர்கள் சந்திப்பு..!!