×

டெல்லியில் ஜெ.பி.நட்டாவுடன் தமிழக பாஜக தலைவர்கள் ஆலோசனை: 20 தொகுதிகள் வேட்பாளர்கள் யார்?…நாளை பட்டியல் வெளியீடு?!!!

சென்னை: தமிழகத்தில் பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்பட உள்ளது. 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சியினர் இடம்  பெற்றுள்ளனர். அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு சட்டப்பேரவை தேர்தலில் 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, நாகர்கோவில், குளச்சல், விளவன்கோடு, ராமநாதபுரம்,  மொடக்குறிச்சி, துறைமுகம், ஆயிரம் விளக்கு,  திருக்கோயிலூர், திட்டக்குடி (தனி), கோயம்புத்தூர் தெற்கு, விருதுநகர், அரவக்குறிச்சி, திருவையாறு, உதகமண்டலம், திருநெல்வேலி, தளி, காரைக்குடி, தாராபுரம் (தனி), மதுரை வடக்கு ஆகிய தொகுதிகளில் களம் காண்கிறது.இந்த தொகுதிகளில் யாரை வேட்பாளரை நிறுத்துவது என்பது தொடர்பாக பாஜக உயர்மட்ட குழு கூட்டம் தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில்  முன்னாள் மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன், அமைப்பு பொது செயலாளர் கேசவ விநாயகம் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் போட்டியிடும் வேட்பாளர் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இதில் யார், யாரை  வேட்பாளராக நிறுத்துவது என்பது முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த பட்டியலுடன் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன், கேசவ விநாயகம் ஆகியோர் இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றனர். தொடர்ந்து, டெல்லியில் பாஜக  தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவுடன் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், பொன்ராதாகிருஷ்ணன், பி.எல்.சந்தோஷ், சி.டி.ரவி, கேசவ விநாயகம் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து இந்த பட்டியல் இன்று இரவு பரிசீலிக்கப்பட்டு வேட்பாளர் யார் என்பது தேர்வு செய்யப்படும். இதைத் தொடர்ந்து நாளை ஒப்புதல் பெற்று வெளியிடப்படும் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையே, வேட்பாளர் பட்டியல்  வெளியாகும் முன்பே பாஜக துணை தலைவர் நயினார் ராகவேந்திரன் இன்று திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. …

The post டெல்லியில் ஜெ.பி.நட்டாவுடன் தமிழக பாஜக தலைவர்கள் ஆலோசனை: 20 தொகுதிகள் வேட்பாளர்கள் யார்?…நாளை பட்டியல் வெளியீடு?!!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,BJP ,JP Nadda ,Delhi ,Chennai ,JP Natta ,
× RELATED அண்ணாமலை மீது கிரிமினல் வழக்குபதிவு...