- இந்தியா
- சரத் குமார்
- இமயமலை
- மூன்றாம் உலகப் போர்.
- ஆர்யா
- கௌதம் ராம் கார்த்திக்
- மனு ஆனந்த்
- ஆர்யா சிக்ஸ்பேக்
இந்தியாவின் ரா ஏஜெண்ட் ‘மிஸ்டர் எக்ஸ்’ சரத்குமார், மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் நியூக்ளியர் பாம் தயாரிக்க உதவும் மூலக்கூறு பொருளை இமயமலையில் ஒளித்து வைத்திருப்பதை அறிந்து மீட்கச் செல்கிறார். ஆபத்தான மிஷனில் ஆர்யா, கவுதம் ராம் கார்த்திக் தனித்தனியாக ஈடுபடுகின்றனர். இந்த ஆபரேஷன் வெற்றிபெற்றதா, இல்லையா என்பது மீதி கதை.
ஏழு சம்பவங்களை மையமாக வைத்து, சர்வதேச ஸ்பை திரில்லர் படத்தை தரமாக கொடுத்துள்ளார், இயக்குனர் மனு ஆனந்த். கடல் நீருக்கு அடியில் இருந்து ஆர்யா சிக்ஸ்பேக் உடம்புடன் மேலே எழுந்து வரும் காட்சி வியக்க வைக்கிறது. அவருக்கும், சரத்குமாருக்குமான பனிப்போர் சஸ்பென்ஸை நீடிக்கிறது. கவுதம் ராம் கார்த்திக் வித்தியாசமான தோற்றம் மற்றும் பாடிலாங்குவேஜில் சிறப்பாக நடித்துள்ளார். அவரது பிளாஷ்பேக் அழுத்தமாக இருக்கிறது.
ஆக்ஷன் ஹீரோவாக தேர்ந்த நடிப்பை தந்துள்ளார். சண்டை காட்சிகளில் மஞ்சு வாரியர் அசத்தியுள்ளார். பல்வேறு கெட்டப்புகளில் தோன்றும் ‘மிஸ்டர் எக்ஸ்’ சரத்குமார், இறுதியில் ராணாவாக மாறுவது எதிர்பாராத ட்விஸ்ட். மற்றும் ரைசா வில்சன், அதுல்யா ரவி, அனகா, காளி வெங்கட், மோகன் ராமன், ஜெயப்பிரகாஷ் ஆகியோரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
ஸ்பை திரில்லருக்கு ஏற்ற பின்னணி இசையில் திபு நைனன் தாமஸ் கடுமையாக உழைத்துள்ளார். அருள் வின்சென்ட் கேமரா, காட்சிகளின் வீரியத்தை சிறப்பாக பதிவு செய்துள்ளது. பிரசன்னா ஜி.கே.வின் எடிட்டிங், ஸ்டண்ட் சில்வாவின் ஆக்ஷன் காட்சிகள் மற்றும் இந்துலால் கவிட், சேகர்.பி ஆகியோரின் அரங்க வடிவமைப்பு குறிப்பிடத்தக்கவை. தேசப்பற்றை அழுத்தமாகவும், பிரமாண்டமாகவும் சொன்ன இயக்குனர் மனு ஆனந்த், 2ம் பாகத்துக்கு லீட் கொடுத்துள்ளார். நடிகர், நடிகையர் மற்றும் டெக்னீஷியன்களின் அபார உழைப்புக்கு பாராட்டுகள்.
