×

சவுந்தர்யா பயோபிக்கிற்கு மோதும் நடிகைகள்

பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்து, ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர், சவுந்தர்யா. கடந்த 1972 ஜூலை 18ம் தேதி கோலார் மாவட்டத்தில் (இன்றைய கர்நாடகா மாநிலம்) கே.எஸ்.சத்யநாராயணா, மஞ்சுளா தம்பதிக்கு பிறந்த அவர், பெங்களூருவில் மருத்துவ படிப்பை முதல் ஆண்டுக்கு பிறகு தொடரவில்லை. 2003ல் தனது தாய்வழி உறவினரும், சாஃப்ட்வேர் இன்ஜினியருமான ஜி.எஸ்.ரகுவை திருமணம் செய்துகொண்டார். ‘பொன்னுமணி’, ‘தவசி’, ‘சொக்கத்தங்கம்’, ‘அருணாச்சலம்’, ‘படையப்பா’, ‘காதலா காதலா’ உள்பட பல படங்களில் சிறப்பாக நடித்த சவுந்தர்யா, 2004 ஏப்ரல் 17ம் தேதி நடந்த விமான விபத்தில் மரணம் அடைந்தார்.

தனது சகோதரர் அமர்நாத்துடன் இணைந்து கரீம்நகரில் இருந்து பெங்களூருக்கு பயணம் மேற்கொண்டபோது அவர் இறந்தார். தனது 31வது வயதில் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சவுந்தர்யாவின் பயோபிக் விரைவில் உருவாக்கப்படும் என்று தகவல்கள் வெளியான நிலையில், சவுந்தர்யா பயோபிக்கில் நடிக்க ராஷ்மிகா மந்தனா விருப்பம் தெரிவித்துள்ளார். ‘சிறுவயது முதலே நான் சவுந்தர்யாவை போல் இருப்பதாக என் தந்தை சொல்வார். அது என் மனதில் மிக ஆழமாக பதிந்துவிட்டது’ என்றார். பிரியங்கா மோகன் கூறுகையில், ‘அழகிலும், நடிப்பிலும் சவுந்தர்யாவை மறக்க முடியாது. அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது பயோபிக் உருவானால், சவுந்தர்யாவாக நடிக்க விரும்புகிறேன்’ என்றார்.

Tags : Soundarya ,Kolar district ,Karnataka ,K.S. Satyanarayana ,Manjula ,Bangalore ,G.S. Raghu ,
× RELATED இயகுனர் வெங்கட் பிரபு வெளியிட்ட “லெனின் பாண்டியன்” பட டிரெய்லர் !!