×

விக்ரம் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

சென்னை: ‘வீர தீர சூரன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு விக்ரம் தனது 63வது படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை ஆனந்த் சங்கர் இயக்குகிறார். இவர் முன்னதாக ‘அரிமா நம்பி’, விக்ரம் நடித்த ‘இருமுகன்’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, விஷால், ஆர்யா இணைந்து நடித்த ‘எனிமி’ ஆகிய படங்களை இயக்கினார். தற்போது 2வது முறையாக விக்ரமை இயக்குகிறார்.

விக்ரம் பிறந்தநாளான நேற்று சத்யஜோதி பிலிம்ஸ் ‘சீயான் 63’ படத்தின் அறிவிப்பு வீடியோவை வெளியிட்டது. அதில் விக்ரம் போலீஸ் அதிகாரியாக தோன்றுகிறார். இப்படம் குறித்து ஆனந்த் சங்கர் நேற்று வெளியிட்ட பதிவில், ‘நான் பெரிதும் மதிக்கும், போற்றும் மற்றும் உத்வேகம் பெறும் ஒருவரின் பிறந்தநாள் இன்று. அவர் நிஜமாகவே ஒரு ஜாம்பவான். நான் உண்மையை சொல்வது என்றால், அவரை போன்ற ஒருவருக்கு நாம் என்ன பரிசு கொடுப்பது?’ என்று தெரிவித்திருந்தார்.

Tags : Vikram ,Chennai ,Sathya Jyothi Films ,Anand Shankar ,Vijay Deverakonda ,Vishal-Arya ,
× RELATED மிஸ்டர் எக்ஸ் விமர்சனம்…