×

தமிழ் எழுத்தாளர்களுக்கு வக்காலத்து வாங்கிய தமிழ்

விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர் நடித்த ‘டாணாக்காரன்’ படத்தை எழுதி இயக்கிய தமிழ், பிறகு வில்லன் நடிகராக பல படங்களில் நடித்தார். தற்போது கார்த்தி, கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கும் ‘மார்ஷல்’ படத்தை எழுதி இயக்குகிறார். சமீபத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான ‘சிறை’ படத்துக்கு கதை எழுதியிருந்தார். அவர் கூறுகையில், ‘இந்திய திரையுலகமே திரும்பி பார்த்து வியக்கும் அளவுக்கு தமிழ் சினிமா வளர்ந்துள்ளது. மலையாள படவுலகையும் நாம் பாராட்ட வேண்டும். அங்கு பல திறமையான எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்.

உண்மையில் இந்தியாவில் அதிகமான எழுத்தாளர்கள் இருக்கும் இடம் தமிழ்நாடுதான். அதிகமான புத்தகங்களும் இங்குதான் வெளியாகின்றன. ஆனால், நமது எழுத்தாளர்களுக்கு நாம் ெகாடுக்க வேண்டிய மரியாதை மற்றும் வாய்ப்புகளை இன்னும் அதிகமாக வழங்க வேண்டும். அந்த எழுத்தாளர்களை நாம் மதிப்பதும், அழைப்பதும் இல்லை. எழுத்தாளர்களின் கதைகளை அதிகமாக வாசித்து, நல்ல கதைகளை திரைப்படங்களாக உருவாக்க வேண்டும். சினிமா என்பது பொழுதுபோக்கு மட்டுமல்ல. அது லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கிறது.

டிஜிட்டல் மற்றும் ஓடிடி தளங்களை நம்பாமல், திரையரங்குகளுக்கான படங்களை தொடர்ந்து உருவாக்க வேண்டும். ரசிகர்கள் தியேட்டருக்கு வந்து பார்த்து ரசித்து மகிழும் வகையில், தரமான படங்களை வழங்க முன்வர வேண்டும் என்பதே எனது விருப்பம்’ என்றார்.

Tags : Vikram Prabhu ,Anjali Nair ,Karti ,Kalyani ,Priyadarshan ,
× RELATED கல்லூரி மாணவர்களுக்கு தமன்னா கொடுத்த டிப்ஸ்