×

மனைவிகள், காதலியுடன் ஆமிர் கான் கொண்டாட்டம்

பாலிவுட் முன்னணி நடிகரும், தயாரிப்பாளரும், இயக்குனருமான ஆமிர் கான், தனது 61வது பிறந்தநாள் விழாவை குடும்பத்தினருடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினார். அவரது முதல் மனைவி ரீனா தத்தா, இரண்டாவது மனைவி கிரண் ராவ், லேட்டஸ்ட் காதலி கவுரி ஸ்ப்ராட், மகன்கள் ஜுனைத் கான், ஈரா கான், ஆசாத் ராவ் கான் பங்கேற்றனர். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் பதிவிட்டுள்ள வீடியோவில் கூறுகையில், ‘ஆமிர் பாய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

அகட்சு அறக்கட்டளை மூலம் ஈரா கான் மனநலம் குறித்த விழிப்புணர்வையும், ஆதரவையும் பரப்பி, பயனுள்ள பல பணிகளை செய்து வருவதை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்றார். விக்கி கவுஷல், ரிதேஷ் தேஷ்முக், ஜெனிலியா கலந்துகொண்டனர். ஆமிர் கான், கவுரி ஸ்ப்ராட் ஜோடியாக வந்தபோது சூழ்ந்துகொண்ட போட்டோகிராபர்கள், அவர்களை விதவிதமாக போட்டோ எடுத்தனர். ஆமிர் கான் மகன் ஜுனைத் கான், சாய் பல்லவி நடித்த ‘ஏக் தீன்’ என்ற இந்தி படம், வரும் மே 1ம் தேதி திரைக்கு வருகிறது.

Tags : Aamir Khan ,Bollywood ,Reena Dutta ,Kiran Rao ,Gauri Spratt ,Junaid Khan ,Ira Khan ,Azad Rao Khan ,Irfan Pathan ,Aamir ,Akatsu Foundation ,
× RELATED கெணத்த காணோம் விமர்சனம்…