×

சமத்துவம் பேசும் தீண்டா பெண்மை

 

சென்னை: ஆடலரசன் புரொடக்சன்ஸ் சார்பில் முத்துசாமி பாலமுருகன் மற்றும் சு.விடுதலை கலை இணைந்து தயாரித்து முக்கிய வேடத்தில் நடிக்கும் படம் ‘தீண்டா பெண்மை’. இப்படத்தை தோமா.பாக்யா என்பவர் இயக்கி வருகிறார். இதில் இயக்குனர் ராஜ் கபூர் உள்பட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இன்று பூஜையுடன் இதன் முதல்கட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது.

கொளஞ்சி குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் குறித்து இயக்குனர் தோமா.பாக்யா கூறுகையில், ‘‘இந்த சமூகத்தில் மனிதனுக்கு மனிதன் சமம், அனைவருக்கும் சம உரிமம், சம கல்வி மற்றும் பெண்களின் தீண்டாமை பற்றி இப்படத்தில் அழகாக சொல்ல இருக்கிறோம். இந்த படத்தின் மூலம் சமுதாயத்தில் ஒரு நல்ல மாற்றத்தை நாங்கள் எதிர்பார்க்கிறோம். காரைக்கால் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது” என்றார்.

Tags : Tinda ,Chennai ,Muthusamy Balamurugan ,Chu ,Liberation Art ,Bagya ,Raj Kapoor ,Pooja ,Kolanji Kumar ,Doma ,
× RELATED கல்லூரி மாணவர்களுக்கு தமன்னா கொடுத்த டிப்ஸ்