×

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் ஆக்சிஜன் உற்பத்தி மையம்: அமைச்சர் நாசர் திறந்து வைத்தார்

திருவள்ளூர்: திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஜிஎன்கே, ஐஆர்சிடிஎஸ், கிவ் இந்தியா ஆகிய தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு வழங்கப்பட்ட ரூ.1.20 கோடி மதிப்பீட்டிலான 333 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட உற்பத்தி மையத்தினை பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது, `திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை டென்மார்க் நாட்டில் இருந்து நேரடியாக இந்த உற்பத்தி இயந்திரத்தை இறக்குமதி செய்து நிறுவப்பட்டதுள்ளது. இந்த உற்பத்தி நிலையம் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் நிறுவப்பட்டு, நிமிடத்திற்கு சுமார் 333 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறன் வாய்ந்தவை. இதன் மூலம் 75 படுக்கைகளுக்கு 24 மணி நேரமும் தங்குதடையின்றி ஆக்சிஜனை கொடுக்கலாம். இந்நிலையத்தின் மூலம் தினமும் 60 சிலிண்டர்களில் ஆக்சிஜன் நிரப்ப முடியும். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் பற்றாக்குறையில்லாமல் சிகிச்சை அளிக்கவும் முடியும்.’ இவ்வாறு அவர் தெரிவித்தார். இதில், கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், திருவள்ளுர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன், டிஆர்ஓ அ.மீனா பிரியதர்ஷ்ணி, ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் சாந்தி, மருத்துவ கல்லூரி முதல்வர் அரசி ஸ்ரீவத்ஸன், ஐஆர்சிடிஎஸ் நிர்வாக செயலாளர் ஸ்டீபன், ஒருங்கிணைப்பாளர் விஜயன், ஜிஎன்கே பவுண்டேஷன் தலைவர் ஜி.நவீன், பொருளாளர் ஜி.ரமேஷ், டிரஸ்டிகள் ஜி.சத்யா, ஜி.சாய்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்….

The post திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் ஆக்சிஜன் உற்பத்தி மையம்: அமைச்சர் நாசர் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Oxygen production center ,Tiruvallur Government Hospital ,Minister ,Nasser ,Tiruvallur ,GNK ,IRCTS ,Give India ,Tiruvallur Government Medical College Hospital ,Dinakaran ,
× RELATED பிரதமர் மோடியிடம் அணுசக்தி, விண்வெளி...