தென்னிந்திய திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர், நிதி அகர்வால். தமிழில் சில படங்களில் நடித்திருந்தாலும், இதுவரை மிகப்பெரிய வெற்றியை அவர் பெறவில்லை. சமீபத்தில் பிரபாஸ் ஜோடியாக அவர் நடித்த ‘தி ராஜா சாப்’ என்ற பான் இந்தியா படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதன் காரணமாக அடுத்தடுத்த படங்களின் கதையை அதிக கவனத்துடன் தேர்ந்தெடுத்து வருகிறார், நிதி அகர்வால். இதற்காக பல தெலுங்கு மற்றும் தமிழ் இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார். இந்நிலையில், சமீபகாலமாக நிதி அகர்வால் உடல் எடை அதிகரித்து காணப்பட்டார்.
இதற்கான கரணம் குறித்து அவர் கூறுகையில், ‘திடீரென்று உடல் எடை அதிகரித்து காணப்படுகிறீர்கள். திடீரென உடல் எடை குறைக்கிறீர்கள் என்று பலரும் என்னை கேட்பார்கள். என் உடல் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கிறது. அதற்கு என்ன காரணம் என்று என்னால் உணர முடியவில்லை. அதை என்னாலேயே கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த நிலையை மாற்ற விரும்புகிறேன். அதற்காக சரியான உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடுகளை மேற்கொள்ள தொடங்கியிருக்கிறேன்’ என்றார்.
